| |
செய்தி எண் (ID #) 17198 | | | சனி, ஐனவரி 23, 2016 | ஒலிம்பியாட்ஸ் தேர்வில் விஸ்டம் பள்ளி மாணவ-மாணவியர் தங்கப் பதக்கம்! | செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 2593 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய | |
சில்வர் ஜோன் நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஒலிம்பியாட்ஸ் தேர்வில், விஸ்டம் பப்ளிக் பள்ளி மாணவ-மாணவியர் பலர் தங்கப் பதக்கம் வென்றுள்ளனர். இதுகுறித்து, அப்பள்ளியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
வருடந்தோறும் சில்வர் ஜோன் நிறுவனத்தால் (SILVER ZONE FOUNDATION) சர்வதேச அளவில் நடத்தப்பட்டு வரும் மிகப் பிரபலமான ஒலிம்பியாட்ஸ் (OLYMPIADS) கல்வித் திறனாய்வுத் தேர்வில் விஸ்டம் பப்ளிக் பள்ளி மாணவ மாணவியர் பலர் தங்கப் பதக்கங்களை வென்றனர் .
சென்ற வருடம் ( 2015 ) நடத்தப்பட்ட திறனாய்வுத் தேர்வில் உலகின் பல பாகங்களிலுமிருந்து 9000 க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 18 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூகவியல் போன்ற பல்வேறு பாடப் பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்ட போட்டியில் பங்கெடுத்துக் கொண்டது இதன் சிறப்பம்சமாகும் .மேலும் பள்ளியின் III STD மாணவி A .M. நபீஷா ஒலிம்பியாட்ஸ் தர வரிசைப் பட்டியலில் 33 வது இடத்தைப பெற்று 2 ஆம் சுற்றுக்குத் தகுதி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
கணிதப் பிரிவில் பதக்கம் பெற்றவர்கள்:
1. A .N .மரியம் IV STD -- - தங்கப்பதக்கம்
2. S.I . ஆயிஷா நிதா V STD --- தங்கப்பதக்கம்
3. S. ஷரிபா ஜுஹைரா VI STD --- தங்கப்பதக்கம்
4. யூனுஸ் முஹம்மத் மொஹிதீன் V STD --- வெள்ளிப் பதக்கம்
5. M.H. நதர் நபீஸ் V STD --- வெங்கலப் பதக்கம்
ஆங்கில மொழிப் பிரிவில் பதக்கம் பெற்றவர்கள்:
1. A .M . நபீஷா III STD --- தங்கப்பதக்கம்
2. S.I . ஆயிஷா நிதா V STD --- தங்கப்பதக்கம்
3. S. ஷரிபா ஜுஹைரா VI STD --- தங்கப்பதக்கம்
4. M .A . சல்மா VI STD --- வெள்ளிப் பதக்கம்
பதக்கம் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்த அனைத்து சாதனை மாணவ,மாணவியரையும் பள்ளி நிர்வாகிகள், முதல்வர் ,மற்றும் ஆசிரியைகள் அனைவரும் வெகுவாகப் பாராட்டினர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
S.I.புகாரீ
(அறங்காவலர் - விஸ்டம் பப்ளிக் பள்ளி)
விஸ்டம் பப்ளிக் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|
|