காயல் ஆன் தி வெப் இணையதள சேவைகள் - 1998ம் ஆண்டு, டிசம்பர் 20 அன்று துவங்கின. இச்சேவைகள் துவங்கி - இரண்டு ஆண்டுகள்
கழித்து - டிசம்பர் 9, 2000 முதல் - தமிழில் செய்திகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.
கடந்த பதினைந்து ஆண்டுகளாக வெளியிடப்படும் செய்திகளை - செய்திகளை தேதி வாரியாக தேட என்ற சேவை
மூலம் காணலாம். இது தவிர, செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல், குறியீடு எண்கள் (ID #) வழி தேடல், காயல்பட்டணம்.காம் இணையதள
பக்கங்கள் தமிழ் வழி தேடல் - போன்ற வசதிகள் மூலமும், பழைய செய்திகளை காணலாம்.
மேலும் - இன்றைய தினத்தில், கடந்த ஆண்டுகளில் வெளியான செய்திகளை - வரலாற்றில் இன்று என்ற
பக்கத்தில் காணலாம். இந்த பக்கம், இது காலம் வரை - இந்த நாள், அந்த ஆண்டு என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.
ஐனவரி 25, 2010 அன்று காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் வெளியான செய்தி [செய்தி எண்: 3875]
திங்கள், ஐனவரி 25, 2010
மாவட்டத்தில் புற்றுநோயாளிகள் அதிகரிப்பு! சுகாதாரத்துறை இயக்குநர் தகவல்!!
செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
தூத்துக்குடி மாவட்டத்தில் புற்றுநோயாளிகள் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து வருவதாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் இளங்கோ கூறினார்.
தூத்துக்குடி மாவட்ட பொது சுகாதாரத்துறை, உதவும் உள்ளங்கள், எம்பவர் அமைப்பு சார்பில் மாவட்டத்திலுள்ள ஆரம்ப சுகாதார மைய மருத்துவர்கள், செவிலியர்களுக்கான - புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தப்பட்டது. எம்பவர் இயக்குநர் சங்கர் தலைமை வகித்தார். சுகாதாரத்துறை துணை இயக்குநர் உமா வரவேற்றார்.
தமிழக பொது சுகாதாரத்துறை மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை இயக்குநர் இளங்கோ கருத்தரங்கைத் துவக்கி வைத்து பேசியதாவது:-
மனிதர்களை இருவிதத்தில் நோய்கள் தாக்குகின்றன. ஓன்று தண்ணீர், கொசு போன்றவற்றின் மூலம் வரும் நோய். மற்றது சர்க்கரை, இரத்தக் கொதிப்பு, புற்றுநோய் போன்ற மனிதனால் உருவாக்கப்படும் நோய்கள். இவற்றில், மனிதனால் உருவாக்கப்படும் நோய்கள்தான் அதிகளவில் பரவுகின்றன. இந்நோய்களைத் தடுக்க தகுந்த விழிப்புணர்வு அவசியமாக தேவைப்படுகிறது.
உலகிலுள்ள 90 சதவிகித புற்றுநோய்கள் தடுக்கக் கூடியவைதான். புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை இளைஞர்கள் முழுமையாகப் பெற்றுவிட்டால், இந்நோயை அடியோடு ஒழித்து விடலாம். பெண்கள் வருடத்திற்கொருமுறை மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் பரிசோதனை செய்தபோது, மாவட்டத்தில் 110 பேருக்கு புற்றுநோய் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 55 பேருக்கு திசு பரிசோதனையில் நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் முதல் நோயாக இந்நோய் சேர்க்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக தூத்துக்குடி மாவட்டத்தில் புற்றுநோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
2006ஆம் ஆண்டு 2,361 பேரும்,
2007ஆம் ஆண்டு 3,355 பேரும்,
2008ஆம் ஆண்டு 3,752 பேரும்,
2009ஆம் ஆண்டு 4,123 பேரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
|