இன்று இந்தியாவின் 67ஆவது குடியரசு நாளாகும். இதனை முன்னிட்டு, காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி சார்பில் குடியரசு நாள் விழா, பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
நிறுவனர் முனைவர் ஆர்.எஸ்.அப்துல் லத்தீஃப் தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் கே.எம்.டீ.சுலைமான், முதல்வர் டி.ஸ்டீஃபன், ஆசிரியர் மவ்லவீ மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ ஆகியோர் முன்னிலை வகிக்க, ஆசிரியர் ஏ.எல்.பஷீருல்லாஹ் தேசிய கொடியேற்றினார்.
விழாவில், மாணவர் கலை நிகழ்ச்சிகளும், போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பும் நடைபெற்றது.
பெண்கள் பிரிவு:
பள்ளியின் பெண்கள் பிரிவில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவிற்கு பள்ளி காப்பாளர் எம்.கே.எஸ்.ரஷீதா தலைமை தாங்கினார். ஆசிரியையர் மைமூன் ஆஸியா, இசக்கி கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியை எம்.ஒய்.செய்யித் ஹஸீனா தேசிய கொடியேற்றினார். ஆசிரியையர் எம்.டீ.பீவி ஃபாத்திமா, ஏ.சந்தன லட்சுமி ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
விழாவில், மாணவியர் கலை நிகழ்ச்சிகளும், போட்டிகளில் வென்ற மாணவியருக்கு பரிசளிப்பும் நடைபெற்றது.
தகவல் & படங்கள்:
K.M.T.சுலைமான்
(துணைச் செயலாளர் - முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி)
கடந்தாண்டு (2015) முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற குடியரசு நாள் விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|