தமிழகம் இவ்வாண்டு இரண்டு தேர்தல்களை சந்திக்க உள்ளது. ஏப்ரல் - மே மாதங்களில் மாநிலவைக்கான தேர்தலும், அக்டோபர் மாதத்தில்
உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தலும் நடைபெறவுள்ளன.
ஊழல், லஞ்சமற்ற சமுதாயங்களை உருவாக்கும் நோக்கோடு, வாக்காளர்கள் மத்தியில் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ள
காயல்பட்டணம்.காம் திட்டமிட்டுள்ளது. இந்த முயற்சி - பல்வேறு அமைப்புகள் மற்றும் ஊடகங்கள் துணையோடு செய்யப்படும்.
இன்று நாடு முழுவதும் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, #KAYALVOTER, #VAAKKU16, #வாக்கு16 என்ற ஹாஷ்டாக்கள்
மூலம் இந்த பிரச்சாரத்தை - காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் துவக்கி வைத்தார்.
வாசகர்களும் - லஞ்சம், ஊழலற்ற சமுதாயத்தை இங்கிருந்து துவக்குவோம் என்ற வாசகங்களோடு, #KAYALVOTER, #VAAKKU16, #வாக்கு16 என்ற
ட்விட்டர் சமூக ஊடக ஹாஷ்டாகுகளை பயன்படுத்தி, தங்கள் புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளலாம்.
|