அண்மையில் பெய்த தொடர் கனமழை காரணமாக - சென்னை, கடலூர் ஆகிய நகரங்கள் பெருவெள்ளப் பாதிப்பிற்குள்ளாயின. அப்பகுதி மக்களின் நிவாரணத்திற்காக, ஐக்கிய அரபு அமீரகம் - துபை காயல் நல மன்றம் 5 லட்சம் ரூபாய் நிதியுதவியளிக்கப்பட்டுள்ளதாக அதன் செயற்குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
சமீபத்தில் சென்னை, கடலூர் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நமதூர் சார்பாக தொடங்கப்பட்ட அமைப்புக்கு மன்றத்தின் சார்பாக ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டது.
பேராசிரியர் சேமுமு. முஹம்மது அலீ நடத்தி வரும் எஸ்-ஐஏஎஸ் அகாடமியில் கல்வி கற்கும் 6 ஏழை மாணவர்களுக்கு மன்றத்தின் மூலமாகவும், மன்ற உறுப்பினர்களின் பங்களிப்புகள் மூலமாகவும் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.
துபை காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டம் கடந்த 08.01.2016 வெள்ளிக்கிழமை அன்று மன்றத் தலைவர் ஜே.எஸ்.ஏ. புகாரீ காக்கா அவர்கள் இல்லத்தில் வைத்து நடைபெற்றது.
கூட்டத்திற்கு சிம்சன் செய்யது முஹம்மது அவர்கள் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர் எம்.எஸ். நூஹு ஸாஹிப் அவர்கள் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.
கூட்டத்தில் நமதூருக்கு மன்றத்தின் சார்பாக செய்யப்பட்டு வரும் நலத் திட்ட உதவிகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கீழ்க்கண்ட் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள்:
1. ஷிஃபா அறக்கட்டளையில் நமது மன்றத்தின் பிரதிநிதியாக நியமிக்கப்படுவதற்கு மன்றத் துணைத் தலைவர் சாளை சலீம் அவர்கள் முன்மொழியப்பட்டார்.
2. கே.எம்.டி. மருத்துவமனையின் இரவு நேர அவசர மொபைல் மருத்துவ சேவைக்கான செலவுகளுக்காக மன்றத்தின் பங்களிப்பை ஏற்கனவே வாக்களித்தபடி ஆறு மாதங்கள் கொடுப்பதாக முடிவெடுக்கப்பட்டது.
3. இக்ரா அமைப்பின் தலைமைப் பொறுப்பை அடுத்த வருடம் நமது மன்றம் ஏற்பது பற்றி கலந்தாலோசிக்கப்படும்.
4. ஜன்சேவா வட்டியில்லா வங்கித் திட்டம் நமதூரில் செயல்படுவது பற்றி மன்றத் தலைவர் விளக்கிக் கூறினார்கள். அதில் நமது மன்ற உறுப்பினர்கள் இணைவதற்கு ஆர்வமூட்டுவது என்று முடிவெடுக்கப்பட்டது.
இறுதியில் இறைப்பிரார்த்தனையுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
M.S.அப்துல் ஹமீத்
படங்கள்:
பாஸுல் ஹமீத்
துபை காயல் நல மன்றத்தின் முந்தைய செயற்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
துபை காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross