இன்று இந்தியாவின் 67ஆவது குடியரசு நாளாகும். இதனை முன்னிட்டு, தூத்துக்குடியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு நாள் விழா, தூத்துக்குடி தருவை மைதானத்தில் இன்று காலையில் கோலாகலமாக நடந்தது. ஆட்சியர் ரவிகுமார் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அத்துடன், காவல்துறையில் சிறப்புற பணியாற்றிய வீரர்களுக்கு அவர் பதக்கங்களை அணிவித்தார்.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னிஸ் இதன்போது உடனிருந்தார். விழா நிறைவில், பள்ளி மாணவ-மாணவியரின் வண்ணமயமான அணிவகுப்பு மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளை அவர்களும், பார்வையாளர்களும் கண்டுகளித்தனர்.
கடந்தாண்டு (2015) தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற குடியரசு நாள் விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
15265
|