காயல்பட்டினம் தென் பாகம் சர்வே எண் 278 இடத்தில் - பயோ காஸ் திட்டம் அமைக்கவும் மற்றும் அவ்விடத்தில் நகரில் உருவாகும் திடக்கழிவுகளை கொட்டுவது எனவும் நகர்மன்றம் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.
கடந்த மார்ச் மாதம், முறையான அனுமதி பெறாமல் துவக்கப்பட்ட இந்த திட்டங்களை எதிர்த்து - கொம்புத்துறை ஊர் நலக் குழு மற்றும் கொம்புத்துறை சதுப்பு நிலக் காடுகள் பாதுகாப்பு குழு ஆகியவை இணைந்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல கிளையில் தொடர்ந்த வழக்கில் (Appeal No.100/2015 [SZ]), மே 21 அன்று தடையாணை வழங்கப்பட்டது.
இந்த தடையாணையை தொடர்ந்து, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், அவ்விடத்தில் பயோ காஸ் திட்டம் அமைக்கவும், குப்பைகளை கொட்டவும் அனுமதிகளை வழங்கியது.
இவ்வழக்கின் வாதங்கள் செப்டம்பர் 9 அன்று நிறைவுற்றன. தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இன்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
தீர்ப்பின் சாராம்சத்தை நீதிபதி ஜோதிமணி இன்று வாசித்தார். அதில் - திட்டத்திற்கு பயன்படுத்தப்படவுள்ள இடம் (278/1B) - அண்ணா பல்கலைக்கழகம் கொடுத்துள்ள அறிக்கைப்படி, CRZ எல்லைக்கு வெளியே உள்ளதால், 2011ம் ஆண்டு CRZ விதிமுறைகளுக்குள் (CRZ NOTIFICATION 2011) வராது என தெரிவித்தார்.
மேலும் - இந்த திட்டம் மத்திய அரசின் ENVIRONMENTAL IMPACT ASSESSMENT, 2006 விதிமுறைகள் உட்பிரிவு 7(i) சரத்திற்கு கீழும் வராது என தீர்ப்பளித்தார்.
இதனை தொடர்ந்து, மே 21 அன்று வழங்கப்பட்ட இடைக்காலை தடை நீக்கப்பட்டது.
விரிவான் தீர்ப்பு விபரம் - அவை முழுமையாக வெளியானப் பின் - தனி செய்தியாக வெளியிடப்படும்.
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 6:00 pm / 26.1.2016] |