இன்று இந்தியாவின் 67ஆவது குடியரசு நாளாகும். இதனை முன்னிட்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், சதுக்கைத் தெருவிலுள்ள கட்சி அலுவலகமான தியாகி பி.எச்.எம்.முஹம்மத் அப்துல் காதிர் மன்ஸிலில் தேசிய கொடியேற்றப்பட்டது.
மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப் முன்னிலை வகிக்க, நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் தேசிய கொடியேற்றினார்.
நகர நிர்வாகிகளான எம்.இசட்.ஸித்தீக், அரபி எம்.எம்.ஷாஹுல் ஹமீத், எஸ்.எம்.செய்கு ஹுஸைன், ஜெ.உமர், எஸ்.ஆர்.ரஹ்மத்துல்லாஹ், மாவட்ட செய்தி தொடர்பாளர் ஏ.ஆர்.ஷேக் முஹம்மத், மாணவரணி மாவட்ட அமைப்பாளர் எம்.ஏ.சி.சுஹைல் இப்றாஹீம், சென்னை மாவட்ட மாணவரணி முன்னாள் ஒருங்கிணைப்பாளர் அப்துல் ஹக் ஃபைஸல் ஆகியோர் இதன்போது உடனிருந்தனர்.
தகவல் & படங்கள்:
A.R.ஷேக் முஹம்மத்
(தூ-டி மாவட்ட செய்தி தொடர்பாளர் - இ.யூ.முஸ்லிம் லீக்)
கடந்தாண்டு (2015) இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் நடைபெற்ற குடியரசு நாள் விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
இ.யூ.முஸ்லிம் லீக் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|