இன்று இந்தியாவின் 67ஆவது குடியரசு நாளாகும். இதனை முன்னிட்டு, காயல்பட்டினம் சென்ட்ரல் துவக்கப்பள்ளியில் இன்று காலையில் குடியரசு நாள் விழா பேராசிரியர் கே.எம்.எஸ்.சதக் தம்பி தலைமையில் நடைபெற்றது.
வாவு எம்.எம்.ஷம்சுத்தீன், பள்ளி செயலாளர் ஏ.எச்.நெய்னா ஸாஹிப், தாளாளர் வாவு எம்.எம்.மஸ்னவீ, வி.என்.எஸ்.முஹம்மத் முஹ்யித்தீன், என்.எம்.எச்.முஹம்மத் முஹ்யித்தீன், எம்.ஏ.அப்துல் ஹக், எம்.டீ.ஜாஃபர் ஸாதிக், ஜெய்னுல் ஆப்தீன் ஆகிய பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர்.
பள்ளி தலைமையாசிரியர் எஸ்.பாபு வரவேற்புரையாற்றினார். நகரப் பிரமுகர் எம்.கே.முஹ்யித்தீன் தம்பி (துரை) இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, தேசிய கொடியேற்றினார்.
மாணவ-மாணவியர் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, ஆசிரியர் ஏ.ஏ.பீர் முஹம்மத் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
இவ்விழாவில், பள்ளியின் ஆசிரியையர், மாணவியர் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
கடந்த 2014ஆம் ஆண்டில் சென்ட்ரல் துவக்கப்பள்ளி சார்பில் நடைபெற்ற குடியரசு நாள் விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
சென்ட்ரல் துவக்கப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 6:00 pm / 26.1.2016] |