இன்று இந்தியாவின் 67ஆவது குடியரசு நாளாகும். இதனை முன்னிட்டு, காயல்பட்டினம் சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியில் தேசிய கொடியேற்றப்பட்டது.
பள்ளியின் தலைமையாசிரியை எம்.செண்பகவல்லி தலைமை தாங்கினார். ஆசிரியை ரா.ஜெய்னம்பு ராழியா வரவேற்புரையாற்றினார். தமிழாசிரியை அழகுரதி சிறப்புரையாற்றினார்.
காயல்பட்டினம் கே.எம்.டீ.மருத்துவமனை பொது மருத்துவர் ஜெ.ஹெலினா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, தேசிய கொடியேற்றினார்.
இவ்விழாவில், பள்ளி மாணவ-மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிறைவில் அவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
ஆசிரியையரான பெ.கன்னிகா பாரதி நன்றி கூறினார்; ரா.செல்வநங்கை நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
பள்ளியின் ஆசிரியையர், அலுவலர்கள், மாணவ-மாணவியர் இவ்விழாவில் கலந்துகொண்டனர். நிறைவில்அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
கடந்தாண்டு (2015) சென்ட்ரல் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற குடியரசு நாள் விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
சென்ட்ரல் மெட்ரிக் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|