சஊதி அரபிய்யா - தம்மாம் காயல் நல மன்றத்தின் சார்பில், 08.01.2016. அன்று நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டம் குறித்து, அம்மன்றத்தின் துணைத்தலைவர் சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் வல்ல அல்லாஹ் ஒருவனுக்கே. அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
சௌதி அரேபியா தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் 74வது பொதுக்குழு கூட்டம், 08.01.2016 அன்று மன்றத்தின் பொதுச் செயலாளர், ஜனாப் செய்யத் இஸ்மாயில் (தம்மாம் இஸ்மாயில்) அவர்களின் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்று முடிந்தன. அல்ஹம்து லில்லாஹ்
.
இந்த நிகழ்வை இளவல் அன்வர் சயீத் கிராஅத் ஓதி துவங்கி வைக்க, மன்றத்தில் துணைத் தலைவர்களுள் ஒருவரான ஜனாப். சாளை ஜியாவுத்தீன் அவர்கள், வந்திருந்த அனைவர்களையும் வரவேற்று அமர்ந்தார்.
அதனைத் தொடர்ந்து மன்றத்தின் தலைவர் ஜனாப் அஹ்மது ரபீக் அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார்கள்.
அவர்களின் உரையில்
- சென்ற பொதுக்குழுவிற்கும் , இந்த பொதுக்குழுவிற்கும் இடையில் மன்றத்தால் செய்யப்பட உதவிகளான ஷிஃபா மூலம் நடைபெற்ற மருத்துவ உதவிகள், சிறு தொழிலுக்காக செய்யப்பட உதவிகள் போன்றவைகளையும்,
- பசுமைக்காயல் திட்டத்தின் செயல்பாடுகள் பற்றியும்
- இரவுகால அவசர மருத்துவ திட்டதின் அவசியம், அதை நம் மன்றம் முயற்சித்து அதை செயல்வடிவம் கொடுக்க மற்ற காயல் நலமன்றங்களையும், நம் கேஎம்டி நிர்வாகத்தையும் தொடர்பு கொண்டது, ஒருங்கினைத்து முயற்சிகள் செய்தது போன்றவற்றை விளக்கினார்.
அந்த திட்டம் இன்றய தினத்தில் துவங்க இருப்பதை மகிழ்வுடன் தெரிவித்து, அதற்கு முன்னின்று, முயற்சிகள் பல செய்து, செயல்வடிவம் கொடுத்த நம் மன்ற உறுப்பினர்களுக்கும், மன்றத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினரும், முன்னாள் தலைவருமான டாக்டர் இத்ரீஸ் அவர்களுக்கும், அனைத்து காயல் நல மன்றத்திற்கும், கேஎம்டி நிர்வாகத்திற்கும்,மற்றும் நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.
மேலும் மக்களுக்கான சேவைகள் அதிகம் உள்ளதால் உறுப்பினர்களுடைய சந்தக்களை அதிகரித்து தருமாறும், ஜகாத், சதக்கா வகைகளை மன்றதிற்கு அளித்து உதவுமாறும், அதை தகுந்த நபர்களுக்கு அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அடுத்ததாக, மன்றத்தின் செயலாளர் ஜனாப் செய்யத் இஸ்மாயில் (தம்மாம் இஸ்மாயில் ) அவர்கள் மன்றத்தின் அனைத்து விபரங்களையும் விரிவாக விபரித்து, அதன் நடப்புத்தன்மை, நடந்த விபரம், இன்ஷா அல்லாஹ் நடக்க திட்டமிடப்பட்டு இருக்கும் செயல்பாடுகள் போன்றியவற்றை விளக்கினார்.
மேலும் நமது மன்றத்தால் ஜலாலியா நிக்காஹ் மஜ்லிஸில், சகோதரர் ஹுசைன் பாஷா அவர்களால் நடத்தப்பட்ட ‘உணர்வாய் உன்னை’, ‘குழந்தை வளர்ப்பு’ நிகழ்ச்சியையும், வாஜிஹா வனிதையர் கல்லூரியில் வைத்து நடைபெற்ற ‘பெர்சனாலிட்டி டெவலப்மெண்ட்’ நிகழ்வையும் விவரித்து கூறினார்.
பின்னர், ஆக்ஷன் கமிட்டியின் ஒருங்கிணைப்பாளர் ஜனாப் இம்தியாஸ் புஹாரி அவர்கள், மன்றத்தால் செயல்படுத்தப்படும் விசேச உதவிகளான மாதாந்திர உணவு பொருட்கள் வழங்குதல் திட்டம், வீடு பழுது பார்த்தல் திட்டம், சிறப்பு கல்வி திட்டம், பசுமைக்காயல் திட்டம் போன்றவற்றின் செயல்பாடுகளைப் பற்றி விபரமாக விவரித்தார்.
இந்த வருடம் இன்ஷா அல்லாஹ் செயல்படுத்தப் போகும் திட்டங்களைப் பற்றியும் குறிப்பிட்டு, மன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பை தருமாறும் வேண்டிக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, துணைச் செயளாலர் பாளையம் சதக்கத்துல்லாஹ் அவர்கள், நமது இக்ரா-விற்கு, இதுவரை உறுப்பினர்களாக தங்களை இணைக்காதவர்களை, அதில் இணைத்துக் கொள்ளுமாறும் வேண்டிக்கொண்டு. உறுப்பினர் படிவங்களை விநியோகித்து, புதிய உறுப்பினர்களை சேர்த்தார்.
மன்றத்தின் பொருளாளர் ஜனாப். இப்ராஹிம் அவர்கள், நிதி நிலை அறிக்கையை சமர்ப்பித்தார்.
மன்றத்தின் உறுப்பினர்களின் கருத்துக்களும், ஆலோசனைகளும் பரிமாறப்பட்டன.
பின்பு, தம்மாம் தமிழ் தாவா மையத்தின் மூத்த தாயி, மன்றத்தின் மூத்த உறுப்பினர், மரியாதைக்குரிய மௌலவி நூஹூ மஹ்லரி அவர்கள், சீரிய, வழமையான, பயன் தரதக்க மார்க்க உரையை நிகழ்த்த,
அண்மையில் மறைந்த நம் மன்றத்தின் முன்னாள் உறுப்பினர் சீராஜ் அவர்களுக்காக மன்ற உறுப்பினர்கள் பிராத்திக்க, மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் ஜனாப் பஷீர் அன்வர் நன்றியுரை நிகழ்த்த, அனைவர்களுக்கும் சிற்றுண்டி பரிமாறப்பட்டு, வல்ல அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தி, துஆவுடன் இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்து லில்லாஹ்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தம்மாம் காயல் நல மன்றத்தின் முந்தைய (73ஆவது) பொதுக்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
தம்மாம் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |