காயல் ஆன் தி வெப் இணையதள சேவைகள் - 1998ம் ஆண்டு, டிசம்பர் 20 அன்று துவங்கின. இச்சேவைகள் துவங்கி - இரண்டு ஆண்டுகள்
கழித்து - டிசம்பர் 9, 2000 முதல் - தமிழில் செய்திகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.
கடந்த பதினைந்து ஆண்டுகளாக வெளியிடப்படும் செய்திகளை - செய்திகளை தேதி வாரியாக தேட என்ற சேவை
மூலம் காணலாம். இது தவிர, செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல், குறியீடு எண்கள் (ID #) வழி தேடல், காயல்பட்டணம்.காம் இணையதள
பக்கங்கள் தமிழ் வழி தேடல் - போன்ற வசதிகள் மூலமும், பழைய செய்திகளை காணலாம்.
மேலும் - இன்றைய தினத்தில், கடந்த ஆண்டுகளில் வெளியான செய்திகளை - வரலாற்றில் இன்று என்ற
பக்கத்தில் காணலாம். இந்த பக்கம், இது காலம் வரை - இந்த நாள், அந்த ஆண்டு என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.
ஐனவரி 24, 2008 அன்று காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் வெளியான செய்தி [செய்தி எண்: 1515]
வியாழன், ஐனவரி 24, 2008
காட்டு மகுதூம்பள்ளி நிர்வாகம் காயலர்களிடம் ஒப்படைப்பு! ஆலோசனைக் குழு நியமனம்!!
செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
காயல்பட்டணம் - வீரபாண்டியன்பட்டணம் இடையேயுள்ளது காட்டு மகுதூம் பள்ளி. இங்கு ஷஹீத் முத்து மகுதூம்
வலியுல்லாஹ் அவர்களின் அடக்கஸ்தலமும், அதனையடுத்து பள்ளிவாசலும் உள்ளது.
இந்த தர்ஹாவை நிர்வகிப்பது விஷயத்தில் கடந்த பல ஆண்டுகளாக காயல்பட்டணம் மற்றும் காயாமொழியைச் சேர்ந்தோரிடையே கருத்து வேற்றுமை
இருந்துவந்தது. அண்மைக் காலம் வரை காயாமொழி நிர்வாகிகளே நிர்வாகம் செய்து வந்தனர். இப்பிரச்சினையைத் தீர்த்துத் தருமாறு தமிழ்நாடு வக்ஃப்
வாரியத்திடமும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
முறையான விசாரணைக்குப் பின், மேற்படி தர்ஹா நிர்வாகம் காயல்பட்டணம் நிர்வாகிகளிடமே அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்படுவதாக தமிழ்நாடு
வக்ஃப் வாரியம் முறைப்படி அறிவித்துள்ளது.
இதனையடுத்து, நெல்லை மண்டல வக்ஃப் கண்காணிப்பாளரை நிர்வாக அதிகாரியாகக் கொண்டு, அங்கு காயல்பட்டணம் நகர்மன்றத் தலைவர் ஹாஜி
வாவு செய்யது அப்துர்ரஹ்மான் தலைமையில் ஆலொசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
|