Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:48:37 PM
ஞாயிறு | 24 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1942, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்00:50
மறைவு17:55மறைவு13:19
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:6005:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4319:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 17200
#KOTW17200
Increase Font Size Decrease Font Size
சனி, ஐனவரி 23, 2016
DCW விரிவாக்கம் வழக்கு: புதிய ஆவணங்களுக்கு DCW தொழிற்சாலை பதில்! ஜனவரி 28 அன்று வாதங்கள் தொடரும்!!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 1595 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

DCW தொழிற்சாலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஜனவரி 19 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் (KEPA) செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-

DCW தொழிற்சாலையின் விரிவாக்கத் திட்டத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை எதிர்த்து, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு – KEPA சார்பில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மே 26, 2014 அன்று தீர்ப்பாயத்தால் அனுமதிக்கப்பட்ட இந்த வழக்கில், அனைத்து தரப்பின் எழுத்துப்பூர்வமான வாதங்கள் (PLEADINGS) சமர்ப்பிப்பு - செப்டம்பர் 3, 2015 அன்று நிறைவுற்றது.

இதனை தொடர்ந்து - இவ்வழக்கில் வாதங்கள் (SUBMISSIONS) - அக்டோபர் 5 அன்று துவங்கின.

அதன் பிறகு அக்டோபர் 10 மற்றும் நவம்பர் 2 ஆகிய தேதிகளிலும், காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) சார்பாக வழக்கறிஞர் டி.நாகசைலா - தனது வாதங்களை தொடர்ந்தார்.

நவம்பர் 16 அன்று விசாரணைக்கு வந்த வழக்கு - சென்னையில் பெய்து வரும் பருவ மழையின் காரணமாக, இவ்வழக்கின் வழக்கறிஞர்கள் தீர்ப்பாயம் வரமுடியாததால், டிசம்பர் 10 தேதிக்கும், பின்னர் ஜனவரி 19 தேதிக்கும் ஒத்திவைக்கப்பட்டது.



ஜனவரி 19 அன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரிக்கும் நீதிபதி திரு சொக்கலிங்கம் விடுமுறையில் இருப்பதால், நீதபதி திரு ஜோதிமணி மற்றும் நிபுணர் உறப்பினர் பி.எஸ்.ராவ் ஆகியோர் இவ்வழக்கினை விசாரித்தனர்.

மத்திய அரசின் வழக்கறிஞராக இதுவரை இருந்த திருமதி சி.சங்கமித்ரைக்கு பதிலாக, இனி வழக்கறிஞர் திரு ஜி.எம். செய்யது நூருல்லாஹ் ஷரீப் செயல் புரிவார் என வகாலத் தாக்கல் செய்யப்பட்டது.

காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு சார்பாக புதிய ஆவணங்கள் இவ்வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தீர்ப்பாயத்தில் இது M.A. NO.5 OF 2016 (SZ) என்ற விண்ணப்பமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

KEPA அமைப்பின் புதிய ஆவணத்திற்கு தங்கள் பதிலை, அவ்வமைப்பிடம் முன்னரே வழங்கி விட்டதாக DCW தொழிற்சாலையின் வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும் - அந்த ஆவணங்களை தீர்ப்பாயத்தில் இன்று முறையாக தாக்கல் செய்வதாகவும் அவர் கூறினார்.

DCW தொழிற்சாலைக்கு ஆவணங்கள் தயாரித்த இரு நிறுவனங்களின் ஒரு நிறுவனமான PURE ENVIRO நிறுவனத்தின் வழக்கறிஞர், தனது தரப்பு பதிலை - வழக்கு அடுத்து விசாரணைக்கு வரும்போது தாக்கல் செய்வதாக தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, இவ்வழக்கின் வாதங்கள் ஜனவரி 28 அன்று தொடரும் என நீதிபதி ஜோதிமணி அறிவித்தார். அன்று காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) வழக்கறிஞர் தனது வாதங்களை தொடருவார்.



இவ்வழக்கில் காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) சார்பாக வழக்கறிஞர்கள் டி.நாகசைலா, டாக்டர் வி.சுரேஷ் மற்றும் பிரீஸ்ட்லி மோசஸ் ஆகியோர் ஆஜராகின்றனர்.

மத்திய அரசு சார்பாக வழக்கறிஞர் திருமதி சி.சங்கமித்திரை (இனி வழக்கறிஞர் ஜி.எம். செய்யது நூருல்லாஹ் ஷரீப்), DCW நிறுவனம் சார்பாக வழக்கறிஞர்கள் ஆர்.வெங்கட்டவதன் மற்றும் நிவேதிதா, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக வழக்கறிஞர் திருமதி ரீதா சந்திரசேகர், தமிழக அரசு சார்பாக வழக்கறிஞர்கள் எம்.கே. சுப்ரமணியம் மற்றும் எம்.ஆர்.கோகுல் கிருஷ்ணன், PURE ENVIRO ENGINEERING PRIVATE LIMITED நிறுவன்ம் சார்பாக வழக்கறிஞர் வி.ஸ்ரீனிவாச பாபு, CHOLAMANDALAM MS RISK SERVICES LIMITED சார்பாக வழக்கறிஞர் பி.பிரேம்குமார் ஆகியோர் இவ்வழக்கில் ஆஜராகின்றனர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்!
இங்கு சொடுக்கவும்
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved