காயல் மாணவர் சமூக நலச் சங்கம் (KSSWA) அமைப்பின் அறிமுகம், கல்வி விழிப்புணர்வு ஆகியவற்றை உள்ளடக்கிய பொதுக்கூட்டம், 17.01.2016. ஞாயிற்றுக்கிழமையன்று 10.00 மணியளவில், காயல்பட்டினம் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸில் நடைபெற்றது.
மாணவர் ஹாஃபிழ் எம்.ஏ.கே.நூஹ் ஸப்ரீ கிராஅத் ஓத, எம்.ஒய்.ஜெஸீமுத்தீன் வரவேற்புரையாற்றினார். அமைப்பின் இலச்சினையை ஆசிரியர் எஸ்.பீட்டர் ராஜ் வெளியிட, அமைப்பின் தலைவர் எஸ்.எச்.ரிஸ்வான் பெற்றுக்கொண்டார். ஹாஃபிழ் எஸ்.முஹம்மத் ஜுல்ஃபிகார் அறிமுகவுரையாற்றினார்.
தமிழக தமிழாசிரியர் கழக செயலாளர் டீ.சுந்தர் சிங், KSSWA சட்ட ஆலோசகர் வழக்குரைஞர் ஜெ.டேவிட் கணேசன், மாநில தனியார் பள்ளிகள் அமைப்பின் செயலாளர் ஏ.வான்றீன் இளங்கோ ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
மாணவர்கள் சார்பில், எம்.ஏ.ஆர்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ உரையாற்ற, மேடையில் அங்கம் வகித்தோருக்கு சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது.
கடந்த 2015 டிசம்பர் மாதம் 20ஆம் நாளன்று நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு சிறப்புப் பரிசுகளும், ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.
திருச்செந்தூர் ஏ.எஸ்.ஏ. அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி மாணவர் ஏ.மணிகண்டன் முதற்பரிசைப் பெற்றார். ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் பட்டாணி அவருக்கு பரிசையும், சான்றிதழையும் வழங்கி, வாழ்த்துரையாற்றினார்.
உடன்குடி சல்மா மெட்ரிக் மேனிலைப்பள்ளி மாணவர் டி.திஷான் இரண்டாவது பரிசையும், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி மாணவர் எம்.இஃஜாஸ், திருச்செந்துர் காஞ்சி சங்கரா அகடமி மெட்ரிக் மேனிலைப்பள்ளி மாணவர் எச்.சரவண சுந்தர் ஆகியோர் மூன்றாம் பரிசையும் வென்றனர். ‘கார்ப்பரேஷன்’ ஹாஃபிழ் எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல் அவர்களுக்கான பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.
மாணவர்கள் எஸ்.சாமிநாதன், எம்.எச்.முஹ்யித்தீன் அப்துல் காதிர், எல்.சிவசங்கர், ஆர்.ஈஸ்வர், எச்.எல்.புகாரீ ரமழான், எம்.ப்ரவீன், எஸ்.எம்.எஸ்.அப்துல் அஜீஸ், கே.பரமசிவம், எம்.இசட்.காதிர் ஸாஹிப் ரிமாஸ், என்.ஏ.ஸாலிஹ் நுஸ்கீ ஆகியோர் ஆறுதல் பரிசுகளைப் பெற்றனர். டூட்டி எம்.எஸ்.எல்.சுஹ்ரவர்த்தி, எம்.ஏ.செய்யித் முஹம்மத் அலீ ஆகியோர் அவர்களுக்கு ஆறுதல் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினர்.
TNSHPGTA அமைப்பின் மாநில அமைப்புச் செயலாளர் எஸ்.சற்குணராஜ், Ave Maria அறக்கட்டளையைச் சேர்ந்த எஸ்.பீட்டர் ராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பின்னர் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
அமைப்பின் தலைவர் எஸ்.எச்.ரிஸ்வான் நன்றி கூற, ஹாஃபிழ் ஏ.ஆர்.அப்துல் காதிர் வாஃபிக் துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, ஆசிரியர் எஸ்.எச்.மீரா ஸாஹிப் தலைமையில் குழுவினர் செய்திருந்தனர்.
தகவல் & படங்கள்:
அஃப்னான் மூலமாக
ஆசிரியர் S.H.மீரா ஸாஹிப்
[கூடுதல் படங்கள் இணைக்கப்பட்டன @ 11:47 / 23.01.2016.] |