காயல் ஆன் தி வெப் இணையதள சேவைகள் - 1998ம் ஆண்டு, டிசம்பர் 20 அன்று துவங்கின. இச்சேவைகள் துவங்கி - இரண்டு ஆண்டுகள் கழித்து - டிசம்பர் 9, 2000 முதல் - தமிழில் செய்திகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.
கடந்த பதினைந்து ஆண்டுகளாக வெளியிடப்படும் செய்திகளை - செய்திகளை தேதி வாரியாக தேட என்ற சேவை
மூலம் காணலாம். இது தவிர, செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல், குறியீடு எண்கள் (ID #) வழி தேடல், காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல் - போன்ற வசதிகள் மூலமும், பழைய செய்திகளை காணலாம்.
மேலும் - இன்றைய தினத்தில், கடந்த ஆண்டுகளில் வெளியான செய்திகளை - வரலாற்றில் இன்று என்ற
பக்கத்தில் காணலாம். இந்த பக்கம், இது காலம் வரை - இந்த நாள், அந்த ஆண்டு என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.
ஐனவரி 21, 2007 அன்று காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் வெளியான செய்தி [செய்தி எண்: 709]
ஞாயிறு, ஐனவரி 21, 2007
நகரின் முதல் டென்னிஸ் மைதானம்!
செய்தி: காயல்பட்டணம்.காம்
நமதூர் இளைஞர் ஐக்கிய முன்னணியின் (YUF சங்கம்) மைதானம் ஈக்கி அப்பா தைக்கா வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இம்மைதானத்தில் வாலிபால் மற்றும் இறகுப்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கு மட்டுமே இதுவரை களம் அமைக்கப்பட்டிருந்தது. சங்கத்தின் செயலாளர் ஜனாப் கவிஞர்
எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் அவர்களின் தீவிர முயற்சியின் பலனாக புதிதாக டென்னிஸ் களம் ஒன்றும் அங்கு நிறுவப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த நகரிலும் இங்கு மட்டுமே டென்னிஸ் விளையாடுவதற்கான களம் அமைக்கப்பட்டுள்ளதால் டென்னிஸ் பிரியர்கள் பெருந்திரளாக தினமும் காலை, மாலை வேளைகளில் வந்து ஆர்வமுடன் விளையாடிச் செல்கின்றனர்.
சில டென்னிஸ் ஆர்வலர்கள் வெளியூர்களிலிருந்து நன்கொடையாக அளித்துள்ள சில டென்னிஸ் ராக்கெட்டுகளைக் (4 மட்டும்) கொண்டே தற்சமயம்
இவ்விளையாட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவ்விளையாட்டில் நமதூர் மக்களுக்கு நிறைய ஆர்வம் இருந்தும், விளையாட்டுச் சாதனங்கள் அதிக விலை கொண்டதாக இருப்பதால் அவர்கள் பெரிதும் ஏமாற்றமடையும் சூழ்நிலை தற்பொழுது இருந்து வருகிறது.
இக்குறையைப் போக்குவதற்காக இச்செய்தியைப் பார்த்துக் கொண்டிருக்கும் நமதூர் மக்களிடம் மேற்படி சாதனங்களை சங்க நிர்வாகிகள் ஆவலுடன்
எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். ஆர்வமுள்ளோர் தொடர்புகொள்ள வேண்டிய அலைபேசி எண்: 0091 9894926256 (அல்ஹாஃபிழ் ஈஸா ஷஃபீக்)
இவரைத் தொடர்புகொண்டு தங்களின் மேலான ஆதரவையும், ஆலோசனைகளையும் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறீர்கள்.
|