கத்தர் காயல் நல மன்ற துணைச் செயலாளர் எஸ்.ஏ.முஹம்மத் முஹ்யித்தீனின் மாமியார் - காயல்பட்டினம் குத்துக்கல் தெருவைச் சேர்ந்த கே.ஏ.பி.முஹம்மத் ஃபாத்திமா, இன்று 10.15 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 65. அன்னார்,
மர்ஹூம் குளம் அஹ்மத் லெப்பை அவர்களின் பேத்தியும்,
மர்ஹூம் குளம் ஏ.எல்.முஹம்மத் அபூபக்கர் அவர்களின் மகளும்,
மர்ஹூம் எஸ்.ஏ.முஹம்மத் முஹ்யித்தீன் அவர்களின் மருமகளாரும்,
மர்ஹூம் கே.ஏ.எல்.ஷெய்கு அப்துல் காதிர், மர்ஹூம் கே.ஏ.எல்.மொகுதூம் முஹம்மத், கே.ஏ.எல்.முஹ்யித்தீன் தம்பி ஆகியோரின் மூத்த சகோதரர் மகளும்,
மர்ஹூம் எம்.கே.எம்.செய்யித் ஐதுரூஸ் அவர்களின் மனைவியும்,
மர்ஹூம் கே.ஏ.பி.செய்யித் அப்துல் காதிர், கே.ஏ.பி.அஹ்மத் லெப்பை ஆகியோரின் சகோதரியும்,
எஸ்.ஐ.முஹம்மத் முஹ்யித்தீன், எஸ்.ஐ.முஹம்மத் அபூபக்கர் ஆகியோரின் தாயாரும்,
கத்தர் காயல் நல மன்ற துணைச் செயலாளர் எஸ்.ஏ.முஹம்மத் முஹ்யித்தீனின் மாமியாருமாவார்.
அன்னாரின் ஜனாஸா, இன்று (21.01.2016. வியாழக்கிழமை) 16.30 மணியளவில், பெரிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
தகவல்:
K.K.S.முஹம்மத் ஸாலிஹ் |