நடப்பு 2016ஆம் ஆண்டிற்கான - சஊதி அரபிய்யா ரியாத் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டத்தில், நகர்நலனுக்காக 2 லட்சத்து 56 ஆயிரத்து 250 ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
எமது ரியாத் காயல் நல மன்றத்தின் 52-வது செயற்குழு கூட்டம் ஹாபிழ் செய்ஹு தாவூத் இத்ரீஸ் அவர்கள் இல்லத்தில் துணைப்பொருளாளர் வாவு கிதுர் முஹம்மது அவர்களின் தலைமையில் கடந்த வெள்ளியன்று (15-Jan) சிறப்பாக நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.
ஆரம்பமாக மதிய உணவு அனைவருக்கும் பரிமாறப்பட்டது, பின்னர் கூட்ட நிகழ்வின் சாரம்சத்தை சகோதரர் முஹ்சின் வாசித்த பின் இறைமறை ஓதி சகோதரர் நயீமுல்லாஹ் அவர்கள் கூட்டத்தை தொடங்கினார். அதன் பின் வந்தோரை சகோதரர் வெள்ளி சித்தீக் அவர்கள் வரவேற்று, தொடர்ச்சியாக நம்மன்றம் கல்விச்சேவையை மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வழி செய்ய வேண்டிய சில ஆழமான கருத்துக்களை விவரித்தார்.
எம்மன்றதின் 2016-17-ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகக்குழு தேர்ந்தெடுக்கப்பட்ட பின் நடக்கும் முதல் கூட்டம் என்பதால் முன்னால் தலைவர் செய்ஹு தாவூத் இத்ரீஸ் அவர்கள் அனைத்து புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி வைத்து, கடந்த காலத்தில் பணியாற்றியது போல் நிகழ்வாண்டிலும் தனது அரும்பணியை எம்மன்றத்துக்கு தொடர்ந்து செய்திடவும் மற்றும் புதிய செயற்குழு உறுப்பினர்களுக்கும் பொறுப்புகளை பிரித்து கொடுத்து அவர்களையும் மாபெரும் பணியில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கடந்த காலத்தில் எம்மன்றம் ஆற்றிய பணிகளின் பின்னணியில் அனைத்து பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் பங்கு அளப்பெரியது என்றும், அதேப்போல் இவ்வருடமும் நம்மோடு இணைந்துள்ள புதிய செயற்குழு உறுப்பினர்களை கொண்டு அதை செயல் வடிவம் கொடுக்க புதிய உறுப்பினர்களுக்கு அழகான அறிவுறுத்தலை மன்ற ஆலோசகர் கூஸ் அபூபக்கர் அவர்கள் எடுத்துரைத்தார். அத்தோடு புதிய உறுப்பினர்கள் அனைவரும் தங்களை செயற்குழுவில் இணைத்துக்கொண்டதற்கு நிர்வாகத்திற்கு நன்றியை தெரிவித்து கொண்டதோடு இன்ஷா அல்லாஹ் நாங்களும் இந்த நல்ல காரியத்தில் முழுமையாக ஈடுபடுத்திகொள்வோம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொண்டார்கள்.
பின்னர் மன்ற செயலாளர் முஹ்சின் அவர்கள் அனைத்து உறுப்பினர்களுக்கும் (புதிய உறுப்பினர்களின் வருகையை முன்னிட்டு) சில முக்கிய அறிவுரைகளை எடுத்து கூறியதுடன் மன்றத்தின் சட்ட விதிமுறைகளை வாசித்து காட்டினார். அத்துடன் நம்மன்றம் செயல்படுத்தி வருகின்ற அனைத்து திட்டங்களையும் விளக்கமாக எடுத்து கூறினார்.
நிதி உதவிகள் (ரூ. 2,56,250/-):
அடுத்து ஊரிலிருந்து உதவி கேட்டு வந்த விண்ணப்பங்கள் வாசிக்கப்பட்டு மருத்துவத்திற்கு மொத்தம் 17 கடிதங்களுக்கு ரூ. 2,11,000 ஒதுக்கீடு செய்யப்பட்டது. அத்துடன் பெறப்பட்ட சிறுதொழில் செய்வது சம்பந்தமாக வந்த 4 விண்ணப்பத்திற்கு ரூ. 45,250/ வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அடுத்து இக்ரா கல்வி சங்கத்திற்கான இவ்வருட கல்வியாண்டின் 2016-17 சந்தா தொகை ஒரு ஞாபக படுத்துதலாக வாவு கிதுர் முஹம்மது அவர்கள் அனைவருக்கும் தெரிவித்து கொண்டார்.
கடந்த வாரம் புதிதாக தெரிவு செய்யப்பட்ட கத்தார் காயல் நல மன்ற நிர்வாகிகளுக்கு எம்மன்றம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்ளப்பட்டது.
இக்கூட்ட ஒருங்கினைப்பாளர்கலான தாவூத் இத்ரீஸ், சபியுல்லாஹ், இஸ்மத் நௌபல் மற்றும் இப்ராகிம் பைஸல் ஆகியோரின் அனுசரணையில் மதிய உணவு பரிமாறப்பட்டது.
இறுதியாக எம்மன்ற மற்றுமொரு ஆலோசகர் MEL நுஸ்கி அவர்கள் அருமையான உணவு ஏற்பாடு செய்த ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட அனைவருக்கும் நன்றி நவில, ஹாபிழ் தாவூத் இத்ரீஸ் துஆவோடு, குழு படம் எடுத்த பின்னர் இக்கூட்டம் இனிதே நிறைவுற்றது, அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
ஊடகத்துறை - ரியாத் கா.ந.மன்றம்
ரியாத் காயல் நல மன்றத்தின் முந்தைய (51ஆவது) செயற்குழுக் கூட்டம் குறித்த காண இங்கே சொடுக்குக!
ரியாத் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய காண இங்கே சொடுக்குக! |