காயல்பட்டினத்தில், 5 வயதுக்குட்பட்ட 2537 குழந்தைகளுக்கு, 11 முகாம்களில் இளம்பிள்ளைவாதம் - போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்டப்பட்டுள்ளது. விபரம் வருமாறு:-
தமிழக அரசின் சார்பில், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இளம்பிள்ளைவாதம் (போலியோ) தடுப்பு சொட்டு மருந்து புகட்டும் முகாம், 17.01.2016, 21.02.2016 ஆகிய நாட்களில் புகட்டப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, முதற்கட்டமாக நேற்று (17.01.2016. ஞாயிற்றுக்கிழமை) 07.00 மணி முதல் 17.00 மணி வரை நடைபெற்றது. காயல்பட்டினத்தில் 14 முகாம்களில் சொட்டு மருந்து புகட்டப்பட்டது.
காயல்பட்டினத்தில், முகாம்கள் வாரியாக போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்டப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை விபரங்கள் வருமாறு:-
காயல்பட்டினத்தில் முகாம் ஏற்பாடுகளை, தூத்துக்குடி மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் ஜான் பாஸ்கோ ஒருங்கிணைப்பில், கோமான் தெரு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் ஹமீத் ஹில்மீ, சுகாதார ஆய்வாளர் சோமசுந்தரம், அங்கன்வாடி பணியாளர்கள், தன்னார்வத் தொண்டர்கள் இணைந்து செய்திருந்தனர்.
கடந்தாண்டு (2015) நடைபெற்ற போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்டும் முகாம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |