இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், சிறுபான்மை உரிமை பாதுகாப்பு விளக்கப் பொதுக்கூட்டம், 16.01.2016. சனிக்கிழமையன்று 18.30 மணியளவில் காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் நடைபெற்றது.
நகர பொருளாளர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்டத் தலைவர் பீ.மீராசா மரைக்காயர், மாவட்டச் செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், மாவட்டப் பொருளாளர் கே.மீராசா, மாநில செயலாளர் காயல் மகபூப், காயல்பட்டினம் நகர கிளை கவுரவ தலைவர் வாவு எஸ்.அப்துல் கஃப்பார், தாய்லாந்து காயிதேமில்லத் பேரவை அமைப்பாளர் வாவு எம்.எம்.ஷம்சுத்தீன், கத்தர் காயிதேமில்லத் பேரவை அமைப்பாளர் கே.வி.ஏ.டீ.ஹபீப் முஹம்மத் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
ஹாஃபிழ் எஸ்.எம்.பி.முஹம்மத் முஹ்யித்தீன் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் வரவேற்புரையாற்றினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேரள மாநில பொதுச் செயலாளர் கே.பீ.ஏ.மஜீத், தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ.ஷாஜஹான், முதன்மைத் துணைத்தலைவர் எம்.அப்துர்ரஹ்மான் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் நிறைவுரையாற்றினார்.
மாவட்ட துணைச் செயலாளர் பெத்தப்பா சுல்தான் நன்றி கூற, மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இக்கூட்டத்தில், கட்சியின் அனைத்து மாவட்ட கிளை அங்கத்தினரும், காயல்பட்டினம் நகர பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
இ.யூ.முஸ்லிம் லீக் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |