காயல் ஆன் தி வெப் இணையதள சேவைகள் - 1998ம் ஆண்டு, டிசம்பர் 20 அன்று துவங்கின. இச்சேவைகள் துவங்கி - இரண்டு ஆண்டுகள் கழித்து - டிசம்பர் 9, 2000 முதல் - தமிழில் செய்திகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.
கடந்த பதினைந்து ஆண்டுகளாக வெளியிடப்படும் செய்திகளை - செய்திகளை தேதி வாரியாக தேட என்ற சேவை
மூலம் காணலாம். இது தவிர, செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல், குறியீடு எண்கள் (ID #) வழி தேடல், காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல் - போன்ற வசதிகள் மூலமும், பழைய செய்திகளை காணலாம்.
மேலும் - இன்றைய தினத்தில், கடந்த ஆண்டுகளில் வெளியான செய்திகளை - வரலாற்றில் இன்று என்ற
பக்கத்தில் காணலாம். இந்த பக்கம், இது காலம் வரை - இந்த நாள், அந்த ஆண்டு என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.
ஐனவரி 16, 2010 அன்று காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் வெளியான செய்தி [செய்தி எண்: 3857]
சனி, ஐனவரி 16, 2010
அஸ்ஹரில் கிரகண சிறப்புத் தொழுகை: திரளானோர் பங்கேற்பு!
செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
நேற்று நிகழ்ந்த கங்கண சூரிய கிரகணத்தை முன்னிட்டு, காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதில் கிரகண சிறப்புத் தொழுகை நடத்தப்பட்டது. பள்ளி இமாம் ஏ.எஸ்.நெய்னா முஹம்மத் தொழுகை நடத்தினார். பள்ளியின் பேருரையாளர் (கத்தீப்) மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ குத்பா உரையாற்றினார்.
கிரகணத்தன்று காலை 11.30 மணிக்குத் துவங்கிய தொழுகை நண்பகல் 12.15 மணிக்கு நிறைவுற்றது. 12.25 மணிக்கு குத்பா உரை நிறைவுற்றது. காயல்பட்டினம் நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து திரளானோர் இத்தொழுகையில் கலந்துகொண்டனர்.
கிரகணத் தொழுகைக்குப் பின், கங்கண கிரகண உச்சகட்ட நேரத்தில் (மதியம் 1.12 முதல் 1.22 மணி வரை) நகர பொதுமக்கள் தங்கள் இல்லங்களின் மாடிகளிலிருந்தும், தெருக்களில் நின்றவாறும், பள்ளிவாசல் வளாகத்தில் நின்றவாறும், 108 ஆண்டுகளுக்குப் பிறகு இப்பகுதியில் தென்படும் கங்கண சூரிய கிரகண காட்சியை கிரகண சிறப்புக் கண்ணாடி மற்றும் வெல்டிங் கண்ணாடி துணையுடன் ஆர்வத்தோடு பார்த்து ரசித்தனர்.
காயல்பட்டினத்தில், மதியம் 1.17 மணியளவில் சூரிய வட்டத்திற்குள் சந்திரன் முழுமையாக மறைந்து தென்பட்டதையடுத்து சூரியன் வளையல் போல தெளிவாகக் காட்சியளித்தது.
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 12:24 pm / 18.1.2016] |