வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் கடந்த 14ஆம் தேதி முதல் 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து போட்டியை புதிய பேரூந்துநிலையம் அருகில் அமைந்துள்ள மைதானத்தில் நடத்தப்பட்டது.
8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டிகள், தலா 4 அணிகள் கொண்ட இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முதல் சுற்று லீக் முறையில் நடத்தப்பட்டது. ஒவ்வொரு பிரிவிலும் அதிக புள்ளிகளை பெற்ற தலா இரண்டு அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன.
அரையிறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற Faams அணியும், Kayal Manchester அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றன.
இன்று (17/01) மாலை நடைபெற்ற இறுதிப் போட்டியில் Kayal Manchester அணியினர் 2 – 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று “வீ-யூனைடெட் ஜூனியர்ஸ் லீக் - 2016” சாம்பியன் பட்டத்தை வென்றது.
இப்போட்டிக்கு முன்னதாக முன்னால் மற்றும் இன்னால் கால்பந்து வீரர்கள் பங்கேற்ற காட்சி கால்பந்து போட்டி நடைபெற்றது. இதனை வந்திருந்த கால்பந்து ரசிகர்கள் ரசித்து கண்டுகளித்தனர்.
இறுதிப் போட்டி முடிவுற்ற பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் எல்.கே.மேல்நிலைப் பள்ளியின் ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியர் திரு. ஜெபராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள்.
பரிசளிப்பு விழாவின் துவக்கமாக இறைமறை வசனம் ஓதப்பட்டது, அதனைத் தொடர்ந்து வரவேற்புரையை சகோ. பாலப்பா அப்துல் காதர் வழங்கினார். தொடராக வீ-யூனைடெட் நடத்திய 7 நபர்கள் பங்கேற்கும் கால்பந்து போட்டி குறித்த அறிமுகவுரையை வீ-யூனைடெட் ஸ்போர்ட்ஸ் கிளப்பின் உறுப்பினர் சகோ. காழிஅலாவுத்தீன் நிகழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து பரிசுகள் வழங்கும் நிகழ்வின் துவக்கமாக போட்டி தொடர் முழுவதும் நடுவர்களாக பணியாற்றிய சகோ. பசீர், சகோ. ஜமால், சகோ. இஸ்மாயில் மற்றும் சகோ. கைசாலி ஆகியோர்களுக்கும், போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் சகோ. இஸ்மாயில், சகோ. முத்து மற்றும் சகோ. சாதுல்லாஹ் ஆகியோருக்கான பரிசுகளை வீ-யூனைடெட் குழுமத்தின் உறுப்பினர் சகோ. மாஹின் வழங்கினார்.
அதனையடுத்து, அரையிறுதிப் போட்டிவரை முன்னேரிய Janseva மற்றும் 916 Gold அணியின் வீரர்களுக்கான தனிநபர் பரிசுகளை, ஐக்கிய விளையாட்டுச் சங்கத்தின் முன்னால் கால்பந்து வீரர் ஜனாப். உமர்அலி அவர்களும், எல்.கே. மே்நிலைப் பள்ளியின் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜனாப். லெப்பைத் தம்பி அவர்களும் வழங்கினார்கள்.
பின்னர் வெற்றிக்கு முனைந்த Faams அணியினருக்கான தனிநபர் பரிசுகளை ஜனாப். உமர்அலி அவர்களும், வெற்றிபெற்ற அணி வீரர்களுக்கான தனிநபர் பரிசுகளை சிறப்பு விருந்தினர் திரு. ஜெபராஜ் அவர்களும் வழங்கினார்கள்.
அதன் தொடராக, வெற்றிக்கு முனைந்த அணிக்கு சுழற்கோப்பையையும், ரூபாய் 3700-க்கான காசோலையையும் ஜனாப். லெப்பைத்தம்பி அவர்கள் வழங்கினார்கள்.
வெற்றிபெற்ற அணிக்கு சுழற்கோப்பையையும், ரூபாய் 7000-க்கான காசோலையையும் சிறப்பு விருந்தினர் திரு. ஜெபராஜ் அவர்கள் வழங்கினார்கள்.
பின்னர் அறிவிப்பாளர் சகோ. பாலப்பா அப்துல் காதர் அவர்களுக்கு பரிசினை ஜனாப். லெப்பைத்தம்பி அவர்கள் வழங்கினார்கள்.
இறுதியாக, போட்டியை சிறப்பாக நடத்தி முடிக்க உதவிய எல்லாம்வல்ல இறைவனுக்கும், அணிகள் தந்துதவிய உரிமையாளர்களுக்கும், மைதானம் தந்துதவிய எல்.கே. குடும்பத்தாருக்கும், சிறப்பு விருந்தினராக பங்கேற்று பரிசுகளை வழங்கி சிறப்பித்த திரு. ஜெபராஜ், ஜனாப். உமர்அலி, ஜனாப். லெப்பைத் தம்பி ஆகியோர்களுக்கும், நடுவர்களாக பணியாற்றியவர்களுக்கும், விளையாட்டு உபகரணங்கள் தந்துதவிய ஐக்கிய விளையாட்டுச் சங்கத்தினருக்கும், முன்னால், இன்னால் விளையாட்டு வீரர்களுக்கும் ஒலி அமைப்பு சிறப்பாக செய்துதந்த அமீர் சவுண்ட் சர்வீஸ் நிர்வனத்தினருக்கும், சகோ. பாலப்பா அப்துல் காதர் நன்றி தெரிவித்தார்.
தகவல் மற்றும் புகைப்படங்கள்:
எம்.ஜஹாங்கிர்
|