பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு, தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா உத்தரவின் பேரில், அரசின் சார்பில் - ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சீனி, இரண்டு அடி நீள கரும்பு, 100 ரூபாய் பணம் ஆகியன பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்பட்டு வருகிறது.
காயல்பட்டினத்திலுள்ள நியாய விலைக் கடைகளில் இன்று காலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. பேருந்து நிலைய வளாகத்திலுள்ள நியாய விலைக் கடையில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையேற்று, தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பை பயனாளிகளுக்கு வழங்கினார்.
ஸீ-கஸ்டம்ஸ் சாலையில் - குருவித்துறைப் பள்ளி கோட்டையில் அமைந்துள்ள நியாயவிலைக் கடையில், பள்ளியின் இணைச் செயலாளர் எஸ்.ஏ.செய்யித் முஹம்மத் ஸாலிஹ் பரிசுத் தொகுப்பை வழங்கினார். அதிமுக நகர நிர்வாகிகளுள் ஒருவரான என்.எம்.அஹ்மத் உடனிருந்தார்.
அனைத்து கடைகளிலும், குடும்ப அட்டைதாரர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெற்றுச் சென்றனர்.
தகவல்களுள் உதவி:
N.M.அஹ்மத் |