கடந்த 2015ஆம் ஆண்டில் நகர்நலனுக்காக 8 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக, ஐக்கிய அரபு அமீரகம் அபூதபீ காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் மக்கள் தொடர்பு செயலாளர் ஏ.ஆர்.ரிஃபாய் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இறையருளால் எமது அபூதபீ காயல் நல மன்றத்தின் 37ஆவது செயற்குழு கூட்டம், 08-01-2016. வெள்ளிக்கிழமை மாலையில், மன்றத்தின் கவுரவ தலைவர் அல்ஹாஜ் I.இம்தியாஸ் அஹ்மது அவர்களின் தலைமையில், மன்றத்தலைவர் வி.எஸ்.டீ.ஷேக்னா லெப்பை இல்லத்தில் நடைபெற்றது.
கிராஅத்துடன் கூட்டம் துவங்கியது. மன்றச் செயல்பாடுகளை விளக்கும் ஆண்டறிக்கை மற்றும் நடப்பாண்டின் வரவு-செலவு கணக்கறிக்கையை மன்றத்தின் இணைப்பொருளாளர் நோனா அபூஹுரைரா சமர்ப்பிக்க கூட்டம் அதற்கு ஒருமனதாக ஒப்புதலளித்தது.
கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய - மன்றத் தலைவர் வி.எஸ்.டீ.ஷேக்னா லெப்பை அனைவரையும் வரவேற்று தலைமையுரையாற்றினார். அவரது உரைச் சுருக்கம்:-
கடந்த 2015 ஆண்டில் இறையருளால் இந்தியத் தொகை எட்டு லட்சம் ரூபாய் நம் ஊரின் மக்களின் நலனுக்காக செலவிடப்பட்டுள்ளது. இதில் காயல் வாழ் மக்களுக்காக
கல்வி,
மருத்துவம்,
மழை வெள்ள நிவாரணம்,
ஷிஃபா மூலம் மருத்துவ உதவி தொகை,
நலிந்த குடும்பத்தின் வீடு புனரமைப்பு,
மட்டுமல்லாது மக்களின் தேவை அறிந்து செயல்படுத்திய பள்ளி இமாம்கள் / முஅத்தின்கள் அன்பளிப்பு திட்டம்,
நோன்பு காலத்தில் வறியோர் வாடாமல் இருக்க சமையல் பொருள் வழங்குதல்,
மேலும் பல முகாம்களை தனியாகவும் பிற மன்றங்களோடு கைகோர்த்து நடத்திய செலவினங்கள்
ஆகியன அடங்கும்.
மேலும் சென்னையில் இயங்கும் SIAS அகாடமியில் IAS பயிற்சி பெறும் பொருளாதாரத்தில் நலிந்த நம் சமுதாய மாணவர்களுக்கு நமது மன்ற உறுப்பினர்கள் தனியாகவும் கூட்டாகவும் பெருந்தொகையை அளித்து வருவதை மகிழ்வுடன் நினைவுகூர்கிறேன்.
நமது மன்றத்தின் தன்னலமற்ற உறுப்பினர்களின் ஆர்வமான இவ்வரிய சேவைகள் மூலமாக நல்ல பல தொலைநோக்குடன் கூடிய செயல்திட்டங்கள் இன்ஷாஅல்லாஹ் வரும் ஆண்டுகளில் செயல்படுத்திடவும், இன்னும் பல புதுத் திட்டங்களை அமுல்படுத்திடவும் நமது காயல் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உறுப்பினர்களின் நிலுவையில் உள்ள சந்தா தொகைகளை முறைப்படி மாதம்தோறும் உறுப்பினர்களிடமிருந்து வசூலித்து, மன்றத்தின் நகர்நலப்பணிகள் தொய்வின்றித் தொடர்ந்து நடைபெற உதவிட ஒத்துழைப்பை தர அன்புடன் வேண்டுகிறேன்.
வருங்காலங்களில் செயற்குழு உறுப்பினர்கள் மாதந்தோறும் நடக்கும் செயற்குழுவில் தமது நல்ல ஆலோசனைகளை நிறைவாகத் தரவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் F.சாகுல் ஹமீது அவர்கள் துஆ இறைஞ்ச - ஸலவாத் – கஃப்பாராவைத் தொடர்ந்து, குழுப்படப் பதிவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது, எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே – அல்ஹம்துலில்லாஹ்!
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபூதபீ கா.ந.மன்றம் சார்பாக...
தகவல்:
செய்தி மற்றும் ஊடகத் துறை பொறுப்பாளர்
படங்கள்:
சுப்ஹான் N.M.பீர் முஹம்மத்
(துணைத்தலைவர்)
அபூதபீ கா.ந.மன்றத்தின் முந்தைய (36ஆவது) செயற்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
அபூதபீ கா.ந.மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|