தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடந்தது. பொதுமக்களிடம் ஆட்சியர் ரவிகுமார் மனுக்களை பெற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
போலியோ சொட்டு மருந்து முகாம்
தமிழகம் முழுவதும் போலியோ சொட்டுமருந்து கொடுப்பதற்கான முகாம் வருகிற 17ம் தேதி மற்றும் பிப்.21ம் தேதிகளில் நடக்கிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட 1,51,672 குழந்தைகளுக்கு சொட்டுமருந்து வழங்கப்பட உள்ளது. இதற்காக மாவட்டம் முழுவதும் 1,172 சிறப்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. மேலும், மாவட்டம் முழுவதும் உள்ள பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள் திருச்செந்தூர் கோவில், டோல்கேட்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட உள்ளன.
மழைவெள்ள நிவாரணம்
தூத்துக்குடி மாவட்டத்தில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 19,678பேருக்கு ரூ.9கோடியே 83 லட்சத்து 90 வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும் 2 ஆயிரம் மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. மாவட்டத்தில் வீடுகளை இழந்த 2,725பேருக்கு மொத்தம் ரூ.1கோடியே 10 லட்சம் வழங்கப்படுள்ளது. வங்கி கணக்கு இல்லாததால் 168பேருக்கு இன்னும் நிதி அளிக்கப்பட வில்லை. மேலும் பயிர் குறித்த கணக்கெடுக்கும் பணி இன்னும் 2 நாட்களில் முடியும். இதில் 1045 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மாவட்டத்தில் சேதம் அடைந்த 3,500 ஹெக்டேர் வாழைகளுக்கு ரூ.5கோடியே 40 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. வெள்ள நிவாரணப் பணிகளுக்காக தூத்துக்குடி மாநகராட்சிக்கு முதற்கட்டமாக ரூ.4.44 கோடியும், 2வது கட்டமாக ரூ.4.30கோடியும், ரூரல் பகுதிகளுக்கு ரூ.1.25 கோடியும், நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.5 கோடியும், காயல்பட்டினம் நகராட்சிக்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. பொங்கல் பரிசு தொகுப்பு வருகிற வியாழக்கிழமை வரை குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கப்படும்.
விவிடி மேம்பாலம்
தூத்துக்குடி விவிடி மேம்பாலம் அமைப்பதற்காக ஆக்கிரமிப்புகளை அகற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அரசானை வெளி வந்த பின்னர், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட இடம் தொழில்துறை புறம்போக்கு இடமாக உள்ளது. இதனால் தொழிற் துறையிடம் சான்றிதழ் பெற அமைச்சர் சண்முகநாதன் மூலம் தொழில் துறை அமைச்சருக்கு சிறப்பு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பபு அலுவலகம்
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பபு அலுவலகம் கட்டிடம் இடிந்துவிழும் நிலையில் உள்ளது. இதனால் அந்த கட்டிடத்தை சீரமைக்க அரசிடம் நிதி கோரபட்பட்டது. இதற்காக அரசு சார்பில் ரூ.10 லட்சம் ஒதுக்கப்பட்டது. ஆனால் புதிய நிதி கட்ட இந்த நிதி போதுமானதாக இல்லாததால், மேலும் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெறும் வரை வாடகை கட்டடித்தில் வேலைவாய்ப்பு அலுவலகம்இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தகவல்:
www.tutyonline.com |