காயல்பட்டினம் அலியார் தெருவிலுள்ள சமுதாயக் கல்லூரி வளாகத்தில், சூரிய மின் உற்பத்தி குறித்த கருத்தங்கம், 05.01.2016. செவ்வாய்க்கிழமையன்று 17.00 மணியளவில் நடைபெற்றது.
அல்-அமீன் நர்சரி & பிரைமரி பள்ளியின் செயலாளர் எஸ்.ஓ.அபுல் ஹஸன் கலாமீ நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். ஹாஃபிழ் எம்.எஸ்.எல்.மீராலெப்பை ஃபத்தாஹ் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். ஷேக் முஹம்மத் ஷமீம் இறைவாழ்த்துப் பாடல் பாடினார். முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி ஆசிரியர் ஏ.எல்.பஷீருல்லாஹ் வரவேற்புரையாற்றினார்.
காயல்பட்டினம் நஸூஹிய்யா மகளிர் மத்ரஸா நிறுவனர் ஏ.ஆர்.அப்துல் வதூத், சமுதாயக் கல்லூரி முதல்வர் எம்.ஏ.புகாரீ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், தூத்துக்குடி பி.எஸ்.என்.எல். பொறியாளர் முகைதீன் அப்துல் காதர், ஹாங்காங் காயிதே மில்லத் பேரவை அமைப்பாளர் வி.எம்.டீ.முஹம்மத் ஹஸன், முன்னாள் ரானுவ வீர்ர் முஹம்மது சலாஹுத்தீன், குரும்பூர் முன்னாள் போஸ்ட் மாஸ்டர் எம்.ஜெ.ஜெகநாதன் உள்ளிட்டோர் கருத்துரையாற்றினர்.
சூரிய மின்னுற்பத்தி ஆலோசகர் பொறியாளர் அதிரை எம்.ஹெச்.நஜ்முத்தீன் இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, சூரிய ஒளியில் மின் உற்பத்தி செய்வது குறித்து விளக்கவுரையாற்றினார்.
இறுதியாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் காயல்பட்டினம் நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் நன்றி கூற, துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. எம்.எல்.ஷேக்னா லெப்பை நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தியதுடன், ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.
தகவல் & படங்கள்:
A.R.ஷேக் முஹம்மத்
|