காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் - நீண்ட இடைவெளிக்கு பிறகு, மீண்டும் திருமணங்கள் பக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய பகுதி (http://www.kayalpatnam.com/weddings.asp) மூலம், முகநூல் வழியாக வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வசதியும், ட்விட்டர் சமூக ஊடகம் வழியாக புகைப்படங்கள் மற்றும் அசைப்படங்கள், உடனடியாக பதிவேற்றம் செய்யும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக - ஒவ்வொரு திருமணப் பதிவுக்கும் தனிப்பக்கமும், ஒவ்வொரு திருமண பதிவுக்கும் பிரத்தியேக ட்விட்டர் ஹாஷ்டாக்கும் உருவாக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 3, 2016 அன்று அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் வளாகத்தில் நடந்த திருமணங்களின் போது எடுக்கப்பட்டு, பகிரப்பட்ட சில காட்சிகள்
அனைத்து காட்சிகளையும் அத்திருமணங்களுக்கான பிரத்தியேக பக்கங்களில் காணலாம்: (#kayalweb26, #kayalweb41)
|