காயல் ஆன் தி வெப் இணையதள சேவைகள் - 1998ம் ஆண்டு, டிசம்பர் 20 அன்று துவங்கின. இச்சேவைகள் துவங்கி - இரண்டு ஆண்டுகள் கழித்து - டிசம்பர் 9, 2000 முதல் - தமிழில் செய்திகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.
கடந்த பதினைந்து ஆண்டுகளாக வெளியிடப்படும் செய்திகளை - செய்திகளை தேதி வாரியாக தேட என்ற சேவை
மூலம் காணலாம். இது தவிர, செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல், குறியீடு எண்கள் (ID #) வழி தேடல், காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல் - போன்ற வசதிகள் மூலமும், பழைய செய்திகளை காணலாம்.
மேலும் - இன்றைய தினத்தில், கடந்த ஆண்டுகளில் வெளியான செய்திகளை - வரலாற்றில் இன்று என்ற
பக்கத்தில் காணலாம். இந்த பக்கம், இது காலம் வரை - இந்த நாள், அந்த ஆண்டு என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.
ஐனவரி 5, 2010 அன்று காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் வெளியான செய்தி [செய்தி எண்: 3823]
செவ்வாய், ஐனவரி 5, 2010
துளிர் கேளரங்கம் அற்பணிப்பு நிகழ்ச்சி!
செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
காயல்பட்டினம் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளி வளாகத்தில், தொழிலதிபர் ஹாஜி எல்.கே.செய்யித் அஹ்மத் அனுசரணையில், கேளரங்கம்
(ஆடிட்டோரியம்) அர்ப்பணிப்பு நிகழ்ச்சி, கேளரங்க வளாகத்தில், 28.12.2009 மாலையில் நடைபெற்றது.
மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை, துளிர் சிறப்புக் குழந்தைகளின் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சென்னை - அண்ணா நகர் மஸ்ஜித் ஜாவித் பள்ளிவாசல் தலைமை இமாம் மவ்லவீ எம்.கே.அலாவுத்தீன் பாக்கவீ துஆ பிரார்த்தனை செய்தார். தொடர்ந்து, துளிர் நிர்வாகிகள் கருத்துரை வழங்கினர்.
சென்னை இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளை (ஐ.எஃப்.டி.) உபதலைவர் டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத் - இஸ்லாமும் சமுதாய சேவையும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
அன்றைய தினம் முஹர்ரம் 10 - நோன்பு தினம் என்பதால், ஆண்களும் - பெண்களும் அரங்கிலேயே நோன்பு துறப்பதற்கும், மஃரிப் தொழுகைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெண்களுக்கு தனி இட வசதி, வாகன வசதி செய்யப்பட்டிருந்தது.
|