பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தூத்துக்குடி மாவட்டத்திற்கான புதிய அலுவலகம், 03.01.2016. ஞாயிற்றுக்கிழமையன்று 10.30 மணிணயவில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஃபாஸில் சமீர் புதிய அலுவலகத்தைத் திறந்து வைத்தார். காயல்பட்டினம் நகர நிர்வாகிகள் உள்ளிட்ட பொதுமக்கள் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.
பின்னர், புதிய அலுவலகத்தில், மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து, (1) தூத்துக்குடி மாவட்டம் முழுவதிலும் மழை நீர் தேங்கிய பகுதிகளில் அவற்றை வெளியேற்றி நிவாரண - சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்தைக் கேட்டுக்கொள்வது, (2) பருவ மழையின்போது குடியிருப்புகளில் மழை நீர் தேங்காவண்ணம் முறையான வடிகால் அமைப்பது, (3) ஏர்வாடியில் முஸ்லிம் இளைஞரைப் படுகொலை செய்தவர்களைக் கண்டிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
PFI / SDPI தொடர்பான முந்தைய காண இங்கே சொடுக்குக!
|