Re:...பேருந்து தரிப்பிடம் இடிக்கப்பட்டதுதான் மகிழ்ச்சி தருகிறது posted bymackie noohuthambi (kayalpatnam )[03 January 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 42734
சில மாதங்களுக்கு முன் அ.க. வணிக வளாகம் கட்டும்போது இந்த பேருந்து தரிப்பிடம் மிக அசிங்கமான தோற்றத்தில் உள்ளது அதை புதிப்பித்துக் கட்டி மக்கள் வசதியாக உட்கார்ந்து கொள்ள தனது சொந்த செலவிலேயே அதை புதுப்பித்து தருவதாக அந்த வளாக கட்டிட சொந்தக் காரர் நமது நகர்மன்றத்தில் சொன்னதாகவும் அதற்கு நகர்மன்றம் மறுத்து விட்டதாகவும் அந்த வளாக உரிமையாளரே என்னிடம் சொன்னார்,
சமூக விரோத செயல்களுக்கு ஒரு இடமாக அது இருப்பதாகவும் புகார்கள் வந்தன. அதை காரணம் காட்டியாவது இந்த இடத்தை இடித்திருக்க வேண்டும் நகர்மன்றம். அரசு அன்று கொல்லும் தெய்வம் நின்று கொல்லும் என்பார்கள். ஆக்கிரமிப்புக்கள் அகற்றப் பட்டபோது யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அப்படியானால் ஆக்கிரமிப்புக்கள் உண்மைதான் என்பது புலனாகிறது.
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
ஒரு இறைவன் இருக்கிறான் மறக்காதே.....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross