செய்தி: எல்.கே.மேனிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர் கலந்தாலோசனைக் கூட்டம்! பயின்றோர் பேரவையை புதுப்பொலிவுடன் துவக்குவது குறித்து கருத்துப் பரிமாற்றம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...யார் அந்த 3 பேர் posted byAbdul Razak (Chennai)[17 January 2016] IP: 182.*.*.* India | Comment Reference Number: 42870
ஒரு மாணவனின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வசிப்பவர்கள் 3 பேர்
1. ஆசிரியர்கள்
2. பெற்றோர்கள்
3. கல்வி/பள்ளி நிறுவன நிர்வாகம்
இந்த மூன்று பேரும் முழு முயற்சி எடுத்து விட்டால் இன் ஷா அல்லாஹ் வெற்றி நிச்சயம் .
இதற்கு எம் பள்ளியின் இந்த மாமன்றம் உறுதியான முயற்சிகளை எடுக்கும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது .
வாழ்த்துக்கள் இன்னும் வளர்வதற்கு ..
இதில் இன்னுமொரு விஷயம் , எத்தனையோ இம்மாமன்றத்தின் உறுப்பினர்களாக இருக்க கூடியவர்கள்/இருக்கப் போகின்றவர்கள் , இந்த பள்ளியில் படித்து நம் நாட்டிலும் , பல்வேறு நாடுகளிலும் நல்ல நிலையில் வேலை வாய்ப்பிலும் , தொழில் துறைகளிலும் இருக்கிறார்கள் .
அப்படிப்பட்ட அனைத்து மக்களின் ஆதரவு அது ஒவ்வொரு ஆளுக்கும் மாறுபடும்,
சிலர் பொருள் ரீதியாக ஆதரவளிப்பர் ,
சிலர் சிந்தனை ரீதியாக ,
சிலர் contacts /தொடர்புகள் ரீதியாக ,
சிலர் மாணவர்களின் சிந்தனைகளை சீர்படுத்தும் விதமான சீரிய பேச்சுக்கள்(Guest lecture) மூலமாக
இன்னும் பல
எனவே , இதன் ஒருங்கிணைப்பாளர்கள் அவரவர் திறமையை , எந்த விதத்தில் ஒத்துழைக்க முடியும் எனும் ஆற்றலை கணக்கில் எடுத்து , அதை ஒரு database போன்று note பண்ணி வைத்து அவரவர்களை அந்தந்த முறையில் உபயோகப்படுத்தி கொள்ளலாம்.
இந்த மாமன்றத்தின் vision & mission என்னவென்பதை தெளிவாக நன்றாக ஆய்வு செய்து எழுதி விட்டு , அதே குறிக்கோள்(V & M ) உடன் இறுதிவரை எவ்வித divertion -ம் இல்லாமல் பயணிக்க வல்ல நாயன் உதவி செய்வானாக என்று உளமார பிரார்த்தனை செய்கிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross