Re:...எதனை காலம் மனிதன் வாழ்ந்தான் என்பது கேள்வி இல்லை posted bymackie noohuthambi (kayalpatnam )[19 January 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 42881
எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் என்பது கேள்வி இல்லை
அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை நினைத்தால் வாழ்க்கையில் தோல்வி இல்லை.
இதைப் படிப்பவர்கள் சிலர் உடனே சலித்துக் கொள்வார்கள் இவனுக்கு எம்ஜியார் பாட்டை எழுதாமல் நேரம் போகாது. சிலர் எப்படி சமயோசிதமாக எழுதுகிறான் என்று பாராட்டுவார்கள்.
இது எம்ஜியார் பாடிய பாடல் அல்ல கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள் TMS பாடியது எம்ஜியார் வாயசைத்தார் என்பதை ஏனோ இவர்கள் வசதியாக மறந்து விடுகிறார்கள்.
மக்கி மாமா அவர்களை பற்றிய இந்த சிறப்பு கட்டுரை இதை எல்லாம் உள்ளடிக்கிய தத்துவம் உள்ளதுதான். மக்கி மாமா அவர்களை மாணிக்க வியாபாரியாக இருக்கும்போது தொடர்பு கொண்டவர்களுக்கு அவரை ஒரு நேர்மையான வியாபாரியாக தெரியும்.
என்போன்று அவர்களுடன் சமீபத்தில் இலங்கை இந்திய கப்பல் போக்குவரத்து ஆரம்பித்து அது அல்ப ஆயுசில் முடிந்து விட்டதே அப்போது அவர்களுடன் கப்பல் பயணம் மேற்கொண்ட அனுபவம் உள்ளவர்களுக்கு அந்த விஷயம்தான் தெரியும்.
தரீக்காவின் தலைவர்களுக்கு சொந்தக் காரராக இருந்து அவர் வாழ்ந்த போது அவருடன் இருந்தவர்களுக்கு அவரை தரீக்காவின் ஒரு உறுப்பினராகவே தெரியும். ஆனால் நல்ல மனிதன் என்று ஒருவரை சொல்வதற்கு இதெல்லாம் காரணிகள் இல்லை என்று நபி தோழர் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்ன செய்தி ஒன்று எனக்கு ஞாபகம் வருகிறது.
ஒருவரை நல்லவர் என்று அடையாளம் காட்ட மூன்று செய்திகளை அவர்கள் சொல்கிறார்கள். பக்கத்து வீட்டுக் காரராக அவர் நம்முடன் பழகும் முறை - பயணத்திலே அவர் நம்முடன் அனுசரித்து செல்லும் முறை - கொடுக்கல் வாங்கலிலே அவர் நடந்து கொள்ளும் முறை இவை மூன்றும்தான் ஒருவனை நல்லவனா என்று தீர்மானிக்கும் LITMUS TEST .
இந்த பரீட்சையில் அவர்கள் A GRADE வாங்கி இருப்பதாக இந்த கட்டுரை மட்டும் சொல்லவில்லை அவரைப் பற்றி அறிந்தவர்கள் எல்லோருமே அப்படிதான் சொல்கிறார்கள்.
நெல்லை ROSEMARY மருத்துவ மனையில் அவர்கள் அனுமதிக்கப் பட்டுள்ள செய்தி கேள்விப் பட்டவுடன் அவர்கள் நாளை வீடு திரும்பி விடுவார்கள் என்றுதான் நினைத்தேன். ஆனால் அல்லாஹ்வின் நாட்டம் வேறுவிதமாக இருந்தது. அவசர அவசரமாக ROSEMARY சென்றபோது ''IT IS TOO LATE FOR COLLECTION ''என்று வங்கியிலே சொல்வதுபோல் சொல்லி விட்டார்கள்.
கையை பிசைந்து கொண்டு நின்றபோது அவரை தாங்கி செல்லும் அமரர் ஊர்தி எனக்காகவே காத்திருந்தது. மக்கி மாமா அவர்களும் என் வரவை எதிர்பார்த்தவராக இருந்ததுபோல் இருந்தது. எங்கிருந்தோ ஒரு கை கண்ணாடியை இழுத்து எனக்கு வழிவிட்டது அவர்கள் நாடியை பிடித்து உயர்த்தவும் அவர்கள் நெற்றியை தொட்டு முத்தமிடவும் எனக்கு ஒரு சந்தர்ப்பத்தை அல்லாஹ் வழங்கினான்.
பேச்சில் இனிமை தொழிலில் நேர்மை பொது வாழ்வில் தூய்மை இவற்றின் மறுபதிப்பு மக்கி மாமா அவர்கள்.
''புரியாத பிரியம் பிரியும்போது புரியும்'' என்பார்கள். அன்று பிரிந்தவர் உறவு எனக்கு புரிந்தது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross