கூட்டத்தில் கலந்தீங்க முக்கிய பதவி போய்விடும் போங்க..! posted byதமிழன் முத்து இஸ்மாயில். (INDIA)[19 January 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 42886
அ.தி.மு.க.பொதுக்கூட்ட பிரசுரத்தில் சுமார் 100 நபர்களுக்கும் மேலான பெயர்கள் அடங்கிய விரிவான பிரசுரத்தின் ஒரு பகுதியை மட்டும் படித்தேன் மறு பகுதியில் அனேகமாக 50 நபகளின் பெயர்கள் அடங்கி இருக்கலாம் என நினைக்கிறேன் - ஆனால் இருக்கையின் (சேர்) எண்ணிக்கையோ 50 ஐ தாண்டியது போல் தெரியவில்லை அதில் அமர்ந்திருப்பதோ 32 நபர்கள் தான் எனது எண்ணிகையில் தென்படுகின்றன - கட்சியின் உண்மை விசுவாசிகளான கட்சியின் மூத்த உறுப்பினகள் பலரை அங்கு காண கிடைக்கவில்லை - அங்கு மேடையில் அமர்ந்திருபதோ கட்சி விட்டு - கட்சி மாறிய தலைகளே தென்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது..
புரட்சி தலைவர் M G R துவக்கிய அ.தி.மு.க வின் உண்மை விசுவாசிகள் பலர் இக்கூட்டத்தை புறக்களித்ததாக வெளியில் பேசிக்கொள்வதை காண முடிந்தது - முக்கிய நபர்கள் எல்லாம் கூட்டத்திற்கு வருவதாக அறிவித்து இருந்த பிரசுரத்தில் அவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளாது போன உண்மை நிலவரம் என்னவென்று அறிய மேடைக்கு பின்புறம் நின்ற ஒரு உளவு பிரிவு அதிகாரி சொன்ன தகவல் என்னவென்றால் நகர கழகம் வெளியிட்ட துண்டு பிரசுரத்தில் நகர்மன்ற தலைவர் பெயர் இடம்பிறாத இக்கூட்டத்தில் தாம் கலந்து கொண்டு பேசினால் கட்சி தலைமையின் மேலிட பிரச்சனைக்கு தாம் ஆளாக நேரிடும் என்றும் தமக்கு வழங்கபட்டிருக்கும் பதவி எந்நேரத்திலும் பறிக்க படலாம் எனவும் அதனால் தவிர்த்து இருக்கலாம் எனவும் தெரிவித்தார்..
எது எப்படியோ போங்க..! நகர் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த குப்பை கிடங்கிற்கு (அது அமைய பெற) அம்மா ஆட்சியில் முக்கியத்துவம் அளிக்காமல் நகரமக்கள் விரும்பாத / எதிர்பார்க்காத பயோ கேஸ் பிளான்ட் (ரூபாய் 90 லட்சம் மதிப்பின் திட்டம்) க்கு மட்டுமே முக்கியத்துவும் அளித்து ஆளும் கட்சியின் நகர பிரமுகர்கள் எல்லாம் நகராட்சி ஆணையிடம் தினம் தினம் தனிமையில் கூடி பேசி கடைசி வரை நகர மக்களின் விருப்பமான சர்வே எண் 278 இல் குப்பை கிடங்கு பணியை துவங்காமல் அங்கு ரூபாய் 90 லட்சம் - பயோ கேஸ் க்கு மட்டுமே ஆர்வம் செலுத்தி நகர்மன்ற தலைவருக்கும் / நகரின் பொது மக்களுக்கும் தெரியாமல் காட்டுக்குள்ளே திருட்டு தனமாக நகராட்சி அதிகாரிகள் பூமி பூஜை போட்டு பிறகு இறுதியில் அந்த பயோ கேஸ் திட்ட பணி நீதி மன்றத்தில் நிலுவையிலுள்ளது - இது நகரின் அம்மா திட்ட சாதனை..!
இங்கு நடக்கும் சம்பவங்கள் எல்லாம் அம்மாவிற்கு தெரியுமா..? என்பது குறித்த கேள்விகளுக்கு இவர்களிடம் விடை இல்லை..
மொத்தத்தில் உண்மை விசுவாசிகள் பலரின் அதிர்ப்தியில் ஏற்பாடு செய்யப்பட்ட பொது கூட்டம் இது - அதான் நாற்காலிகள் காலியாக கிடக்கின்றன..!
அம்மாவிற்கு பிறகு தலைவர் - தலைவருக்கு பிறகு அம்மா இப்படியே இந்த தமிழகம் நகரும் - மக்களின் கையில் ஓட்டுக்கு பணமும், மதுவும், பெட் சீட்டும் தொடரும் போங்க..!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross