செய்தி: நகராட்சி செயல்பாடுகள் முடக்கம்: ஒத்துழைக்காத அதிகாரிகள் குறித்து உண்மை நிலையறிய முதலமைச்சர் நேரடி தலையீடு தேவை! நகர்மன்றத் தலைவர் வெளியிட்ட பிரசுரத்துடன் YUF கோரிக்கை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அடுத்து ஆட்சி மாற்றம் ஏற்ப்பட்டாலும் அதிகாரிகள் ஓன்று தான் ஆகவே இனி நீதி மன்ற நடவடிக்கையே சாத்தியப்படும்..! posted byதமிழன் முத்து இஸ்மாயில். (INDIA)[25 January 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 42937
நகரின் தற்போதய ஆளும் கட்சியின் பிரமுகர்களால் எந்த நன்மையும் நகருக்கு இல்லை - இனி அடுத்து வரும் ஆட்சி மாற்றமும் இதுவே தொடரும் ஆகவே தவறு புரியும் அதிகாரிகள் மீது நீதி மன்ற நடவடிக்கையே தீர்வாகும்..!
நகரின் மிக முக்கிய சாலை பணிகள் முடக்கம் மற்றும் குறிப்பாக சர்வே எண் 278 / 1Bயில் நகர் மக்கள் ஆவலுடன் விரும்பிய குப்பை கிடங்கிற்கு காம்பவுண்டு சுவர் கட்டுதல் மற்றும் அங்கு குப்பை கிடங்கை அடைய தெளிவான சாலைகள் குறித்த பணிகள் / அதில் மக்களின் சந்தேகங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கபடாமல் ரூபாய் 90 லட்சம் மதிப்புடைய பயோ கேஸ் க்கு மட்டுமே முக்கியத்துவும் அளிக்கப்பட்டு குப்பை கிடங்கு அங்கு அமைக்கும் பணிகள் புறம் தள்ளப்பட்டு அது தப்போது நீதி மன்ற வழக்கின் பிடியில் சீரழிய ஒரே காரணம் குறிப்பாக (ஆணையரின் திருட்டு தனமான பூமி பூஜையே மிக பெரிய குழப்பமான சூழலை உருவாக்கியது)
வெளிப்படை தன்மையில்லாத நகராட்சி அதிகாரிகளின் அலட்சிய போக்கே (திருட்டு தனமே / ஒளிவு மறைவு வேலைகளே) இதற்க்கு காரணம் என நகரின் நடுநிலைவாதிகள் மற்றும் சமூக ஆர்வலகள் அனைவர்களும் இதை அறிந்ததே..!
அதையே தமிழக முதல்வரும் அறியும் விதமாக ஒரு நல்ல காரியத்தை நகரின் நன்மை / மக்கள் நலன் கருதி (YUF) இளைஞர் ஐக்கிய முன்னணி நிர்வாகிகள் தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு (முதல்வர் பார்வைக்கு) கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ள செய்தி பாராட்டுக்குரியது.
நமது நகராட்சியின் உண்மை நிலையறிய முதலமைச்சர் நேரடி தலையீடு தேவை என்று இது போன்று நகரின் பல பொதுநல அமைப்புகள் / பல கொள்கையுடைய ஜமாத்துக்கள் / நகர் நல சங்கங்கள் யாவும் தனி தனியாக தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு கவனத்திற்கு தெரியபடுத்த வேண்டும் என்பது எனது ஆவல் - அப்போதுதான் எங்கு தவறு / முறைகேடு நடக்கிறது என்ற உண்மையான நிலவரம் வெளிவரும்.
மிக முக்கியமாக நமது நகரின் சி - கஸ்டம்ஸ் சாலையை அமைக்க நகர்மன்ற தீர்மானத்திற்கு எதிராக 12 மாதங்கள் மட்டுமே சாலைக்கு உத்திரவாதம் என சாலை பணிகள் அமைக்க முற்ப்பட்டால் அதில் பல பொதுநல அமைப்புகள் ஓன்று கூடி (குறிப்பாக YUF யின் நிர்வாகிகள்) ஆணையரிடம் விளக்கம் கேட்க வேண்டும் திருப்தி இல்லாத பட்சத்தில் நீதி மன்றம் மூலம் நமது வரி பணம் பல லட்சம் பாதுகாக்கப்பட வேண்டும்..!
அடுத்து ஆட்சி மாற்றம் ஏற்ப்பட்டாலும் அதிகாரிகள் ஓன்று தான் ஆகவே இனி நல்ல தரமான உத்திரவாதமுள்ள சாலைகள் நகரில் அமைய பெற நீதி மன்ற நடவடிக்கையே இனி சாத்தியப்படும்..!
(YUF) இளைஞர் ஐக்கிய முன்னணியின் கோரிக்கை மனுவின் பயனாக நகராட்சி மீது நடவைக்கை எடுக்கப்பட்டு மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற நாம் துஆ செய்வோமாக..!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross