Re:...சென்ற வருடம் நாங்களும் சென்றோம்... posted bymackie noohuthambi (kayalpatnam )[26 January 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 42944
சென்ற வருடம் நாங்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். இந்த வருடம் நமதூர் மக்களை அங்கு காணவில்லை. டிசம்பர் மாதம் கல்யாண காலம். ஊர் வந்த எல்லோரும் இனிமேல்தான் திரும்பி செல்வார்கள். அவசர அவசரமாக எனது மைத்துனர் முஹம்மது அலி 48 அவர்களை இன்று அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மதுரை விமான நிலையத்துக்கு அனுப்பினோம். அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கிராத் ஓதி மூவர்ணக் கோடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என்று வாட்சுப்பில் ஒரு செய்தி வந்தது. ஆனால் துரசிர்ஷ்ட வசமாக விமானம் புறப்பட தாமதமாகி விட்டதோ என்னவோ அவர் இப்போது மாலை 4 மணிக்குதான் இலங்கை தலை நகர் கொழும்பு போய் சேர்ந்துள்ளார்.
என்றாலும் இலங்கையில் வாழும் காயலர்கள் எல்லோரும் சுபிட்சமாக வாழவும் அங்குள்ள மக்களுடன் ஐக்கியமாக வாழவும் வாழ்த்துகிறோம். தொப்புள்கொடி உறவும் தாலிக் கோடி உறவும் எப்போதும் கொழும்பு காயல்பட்டணம் உறவுகளை காலம் முழுவதும் உலகிற்கு எடுத்து சொல்லும்.வாழ்த்துக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross