முறைகேடுகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் தலைவரை பற்றி விமர்சனம் சொல்லும் நீங்கள் நகராட்சி ஆணையரை பற்றி ஒரு வரி கூட கண்டுகொள்ளவில்லை / சொல்லப்படவில்லை உங்களின் நெருக்கம் புரியும். posted byதமிழன் முத்து இஸ்மாயில். (INDIA)[04 February 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 43033
நகராட்சியில் மாதாந்திர கூட்டத்தில் தலைவரே இல்லாமல் கூட்டம் நடத்தி அக்கூட்டம் சட்டப்படி செல்லும் என துண்டு பிரசுரத்தில் மட்டுமே தன் நிலை குறித்து வாதிடும் உறுப்பினர்களே..!
உங்கள் வாதப்படி தாங்கள் நடத்திய அக்கூட்டம் சரியானது தான் என்றால் தலைவர் நீதி மன்றத்தில் சமர்ப்பித்த மனு அன்றைக்கே மாண்புமிகு நீதியரசர் முன்பாக தள்ளுபடி செய்திருக்கபட வேண்டுமே..?
பிரபல உயர் நீதி மன்ற வக்கீலுக்கு இதுவரை 10 லட்சத்திற்கும் மேலாக தலைவர் செலவு செய்துள்ளார் என சுட்டி காட்டும் உறுப்பினர்களே..! இது குறித்த தகவல் தலைவரின் வழக்குகளை வாதாடும் பிரபல வக்கீல் அஜ்மல் கான் அவர்களின் லா கன்சல்டிங் நிறுவனத்தின் கவனத்திற்கு தெரியுமா..?
சி - கஸ்டம்ஸ் சாலை அமைக்க நகர்மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி பல மாதங்கள் ஆகியும் அச்சாலை குறித்து இது வரை எந்த முயற்சியும் மேற்கொள்ளாத நகராட்சி ஆணையரை பற்றி ஒரு வரி கூட கண்டுகொள்ளவில்லை / சொல்லப்படவில்லை என்கிறபோது உங்களின் மற்றும் ஆணையரின் நெருக்கம் எவ்வகையானது என்பதை இத்துண்டு பிரசுரம் படிப்போர் பலருக்கும் தெரியாதது அல்ல.
குறிப்பு:- அடுத்த நகர் மன்றத்தில் உங்களில் எத்தனை பேர் உறுப்பினர்களாக போட்டியிட்டு மீண்டும் மக்கள் பிரதிநிதியாக வருவீர்கள் என்பதை தங்களுக்குள் சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள் - இன்றைய தலைமுறையினர்கள் மிக தெளிவாகவும் விழிப்புணர்வோடும் இருக்கிறார்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross