காயல்பட்டினம் நகராட்சி சாலைகளின் நடப்பு நிலையை விளக்கி, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் அண்மையில் அறிக்கை ஒன்றை பொதுப் பிரசுரமாக வெளியிட்டிருந்தார்.
அதற்கு மறுப்பு தெரிவித்து, காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 11ஆவது வார்டு உறுப்பினரும் - துணைத்தலைவருமான எஸ்.எம்.முகைதீன், 14 நகர்மன்ற உறுப்பினர்கள் சார்பில் 4 பக்கங்களைக் கொண்ட பிரசுரம் பின்வருமாறு வெளியிடப்பட்டுள்ளது:-
இப்பிரசுரம், 29.01.2016. வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டது.
1. Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[03 February 2016] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43020
அஸ்ஸலாமு அலைக்கும்
உங்களை நம்மி தேர்வு செய்த ஊர் மக்களாகிய எங்களை நின்னைத்து தான் வருத்தமாக உள்ளது.இப்படி நீங்கள் ஏமாற்றுவீர்கள் என்று ஊர் மக்களாகிய நாங்கள் கொஞ்சமும் எதிர் பார்க்க வில்லை ....''மொட்டையோ ''….மொட்டை''.
ஊர் மக்கள்'' நல்ல திட்டத்தை ''ஒன்றுமே பார்க்க வில்லை...... ஆனால் உங்களின் தேவைகற்ற உங்களின் ''நோட்டிச்சுகளை தான் வெறுப்புடன் மக்கள் பார்த்து வருகிறார்கள் .....
MLA '' பணம் நம் ஊருக்கு '' யூஸ் '' இல்லாமல் திரும்பி போனது அனைவர்களுக்குமே மன வருத்தமே ....காரணம் தங்களில் ஒற்றுமை இல்லாமையே ....
சுருக்கமாக சொல்வதனால் நீங்கள் எங்கே ஊருக்கான நல்ல '' திட்டங்களை ''ஊழல இல்லாமல் முறையாக செய்ய விட்டீர்கள் ...தொகுதி மக்களுக்கு ''பச்சை துரோகம் '' அல்லவா செய்து விட்டீர்கள் ....
தங்களின் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் பார்க்கலாம் ....
காலம் கடந்தும் விட்டது.சொல்லியும்,எழுதியும் எந்த பிரோசனமும் அரவே கிடையாது....
ஊர் மக்களுக்கு '' நாமத்திலும் பெரிய நாமம் ஒரு சில உறுப்பினர் களை தேர்வு செய்தது தான்.....
நீங்கள் பணம் படைத்த ஒரு சிலர்கள் பின்னால் அலையாமல் தேர்வு செய்த மக்களை கொஞ்சம் நினைத்து இருந்தால்,ஊர் மக்கள் உங்களை பாராட்டி,, நினைத்து அவர்களின் நெஞ்சில் நிறுத்தி இருப்பார்கள்.
தயவு செய்து..பயோஸ் திட்டத்திலாவது ... குப்பை லாரியில் .... குப்பைகளை ரோட்டில் கொண்டு செல்லும் போது ...குப்பைகள் வழிகளில் சிதறாமல் தார்பாய் போட்டு கவனமாக் எடுத்து செல்வது தான் அவசியம் ....
குப்பைகள் ரோட்டில் சிதறினால் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் இறங்க வாய்ப்பு உண்டு ... இதையும் தொகுதி உறுப்பினர்கள் மனதில் கொள்ளவேணும் ....
உங்களை நினைத்து பார்க்க ஊர் மக்களை நீங்கள் வைக்க வில்லையே....
சிந்திப்பீர் .....செயல்படுவீர் .... இந்த வாசகம் உங்களில் ஒரு சிலருக்கு தான் 100 % பொருந்தும் சார் ..... வஸ்ஸலாம்
2. Re:... posted byMagdoom (Kayalpatnam)[03 February 2016] IP: 182.*.*.* India | Comment Reference Number: 43031
அப்பபள்ளி தெரு ரோட்டை சரிவர தோண்டாமல் போட்டால் எங்கள் வீடுகள் எல்லாம் ரோட்டுக்கு கீழே போகவேண்டியதுதான் .
அப்பபள்ளி தெருவில் தண்ணீர் தேங்க காரணம் ,ரோட்டை தென்பாகம் மேடாகவும் ,வடபாகம் பள்ளமாகவும் போட்டதுதான்.அதனால் மழை காலத்தில் தெருவின் தென்பாகத்தில் சொட்டு நீர் கூட தேங்குவது இல்லை.
இது சாலை போட்ட contractor இன் தவறு.ரோட்டை வெறும் wafer போலே போட்டதால் அது தண்ணீரில் கரைந்து தானே போகும்.
சரியாக தோண்டாமல் இதற்கு மேல் புதிய ரோடு போடுவதாக இருந்தால் எங்களுக்கு அப்படி ஒரு ரோடு தேவையே இல்லை .
3. முறைகேடுகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் தலைவரை பற்றி விமர்சனம் சொல்லும் நீங்கள் நகராட்சி ஆணையரை பற்றி ஒரு வரி கூட கண்டுகொள்ளவில்லை / சொல்லப்படவில்லை உங்களின் நெருக்கம் புரியும். posted byதமிழன் முத்து இஸ்மாயில். (INDIA)[04 February 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 43033
நகராட்சியில் மாதாந்திர கூட்டத்தில் தலைவரே இல்லாமல் கூட்டம் நடத்தி அக்கூட்டம் சட்டப்படி செல்லும் என துண்டு பிரசுரத்தில் மட்டுமே தன் நிலை குறித்து வாதிடும் உறுப்பினர்களே..!
உங்கள் வாதப்படி தாங்கள் நடத்திய அக்கூட்டம் சரியானது தான் என்றால் தலைவர் நீதி மன்றத்தில் சமர்ப்பித்த மனு அன்றைக்கே மாண்புமிகு நீதியரசர் முன்பாக தள்ளுபடி செய்திருக்கபட வேண்டுமே..?
பிரபல உயர் நீதி மன்ற வக்கீலுக்கு இதுவரை 10 லட்சத்திற்கும் மேலாக தலைவர் செலவு செய்துள்ளார் என சுட்டி காட்டும் உறுப்பினர்களே..! இது குறித்த தகவல் தலைவரின் வழக்குகளை வாதாடும் பிரபல வக்கீல் அஜ்மல் கான் அவர்களின் லா கன்சல்டிங் நிறுவனத்தின் கவனத்திற்கு தெரியுமா..?
சி - கஸ்டம்ஸ் சாலை அமைக்க நகர்மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி பல மாதங்கள் ஆகியும் அச்சாலை குறித்து இது வரை எந்த முயற்சியும் மேற்கொள்ளாத நகராட்சி ஆணையரை பற்றி ஒரு வரி கூட கண்டுகொள்ளவில்லை / சொல்லப்படவில்லை என்கிறபோது உங்களின் மற்றும் ஆணையரின் நெருக்கம் எவ்வகையானது என்பதை இத்துண்டு பிரசுரம் படிப்போர் பலருக்கும் தெரியாதது அல்ல.
குறிப்பு:- அடுத்த நகர் மன்றத்தில் உங்களில் எத்தனை பேர் உறுப்பினர்களாக போட்டியிட்டு மீண்டும் மக்கள் பிரதிநிதியாக வருவீர்கள் என்பதை தங்களுக்குள் சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள் - இன்றைய தலைமுறையினர்கள் மிக தெளிவாகவும் விழிப்புணர்வோடும் இருக்கிறார்கள்.
4. இன்ஷா அல்லாஹ்! அடுத்தமுறை ஆலிம்கள் மற்றும் ஆலிமாக்கள் நின்றால் மட்டும் ஒட்டு !! இல்லையேல் NOTA என்ற வேட்டு!!! posted byMohideen Abdul Kader (Abudhabi)[04 February 2016] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 43034
அஸ்ஸலாமு அழைக்கும்.
அதிகம் ஆலிம் ஆலிமாக்கள் நிறைந்த நமது ஊரில் நமது நாடு ஏன் உலகத்திற்கே ஓர் எடுத்துக்காட்டாக இன்ஷா அல்லாஹ்! அடுத்தமுறை ஆலிம்கள் மற்றும் ஆலிமாக்கள் அவரவர் சார்ந்த ஜமாத்துகளின் துணையுடன் காயலை காப்பாற்றுமுகமாக தேர்தலில் நின்றால் மட்டும் ஒட்டு !! இல்லையேல் NOTA என்ற வேட்டு!!!
தற்போதுள்ள 18 + 1 = 19 தலைவர் உட்பட அனைத்து உறுப்பினர்களும் அறிவுரை கூறவோ நடந்த செயல்பாடுகளை எடுத்து கூறவோ தகுதியற்றவர்கள்.
5. Re:... posted bySabeer (Bangalore) (Bangalore)[04 February 2016] IP: 182.*.*.* India | Comment Reference Number: 43037
உறுப்பினர்களாகிய நீங்கள் அனைவரும் வெளியிட்டுள்ள இந்த பிரசுரத்தின் மூலம் ஒன்று மட்டும் விளங்க முடிகிறது. மக்களின் வரிப்பணத்தை சுருட்டிக் கொண்டிருக்கும் ஆணையருக்கு நீங்கள் அனைவரும் துணையாக இருக்கிறீர்கள் என்பது தெள்ளத் தெளிவாகிறது.
வரிக்கு வரி தலைவரை குறை சொல்லும் நீங்கள் எங்காவது ஆணையரை கண்டித்திருக்கிறீர்களா?
அவர் நேர்மையாகத்தான் நடந்து கொள்கிறார் என்று உங்கள் மனசாட்சியின் படி சொல்ல முடியுமா?
இருப்பது இன்னும் கொஞ்ச காலம். ஆனால் மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. உங்களைப் பற்றி தெளிவாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். அடுத்த முறை தேர்தலில் போட்டியிட்டு பாருங்கள்! தெரியும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross