காயல்பட்டினம் சதுக்கைத் தெரு, அர்ரஹீம் மீலாது குழுவின் சார்பில், நபிகள் நாயகம் அவர்களின் பிறந்த நாள் விழா, மஹான் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் நினைவு நாள் விழா, அர்ரஹீம் மீலாதுர்ரஸூல் குழுவின் 29ஆம் ஆண்டு துவக்க விழா ஆகிய முப்பெரும் விழாக்கள், 31.01.2016. ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது.
அன்று அதிகாலையில், ஜன்னத்துல் காதிரிய்யா பெண்கள் தைக்காவில், முஹ்யித்தீன் பள்ளியின் இமாம் நஹ்வீ எம்.எம்.முத்துவாப்பா தலைமையில் கத்முல் குர்ஆன் மஜ்லிஸும், 09.30 மணிக்கு, பெரிய குத்பா பள்ளியின் இமாம் ஹாஃபிழ் எஸ்.கே.ஏ.நத்ஹர் ஸாஹிப் தலைமையில் மவ்லித் மஜ்லிஸும் நடைபெற்றன.
16.30 மணிக்கு, மவ்லவீ எஸ்.எஸ்.இ.காழி அலாவுத்தீன் தலைமையில் மீலாது விழா பேரணியும், மக்தப் மாணவர்களின் தஃப்ஸ் நிகழ்ச்சியும் நடைபெற்றன.
மஃரிப் தொழுகைக்குப் பின் 18.50 மணிக்கு, இலங்கை - கொழும்பு மேமன் பள்ளியின் இமாமும் - காதிரிய்யா தரீக்காவின் கலீஃபாவுமான மவ்லவீ எல்.ஓ.முஹம்மத் அலீ மஹ்ழரீ தலைமையில் காதிரிய்யா திக்ர் மஜ்லிஸ் நடைபெற்றது.
இஷா தொழுகைக்குப் பின் 20.15 மணியளவில், ஹாஃபிழ் எல்.எஸ்.முஹம்மத் இர்ஃபான் கிராஅத் ஓத, திருவிதாங்கோடு ஜாமிஉல் அன்வர் அரபிக் கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.நிஜாமுத்தீன் அஹ்ஸனீ சன்மார்க்க சொற்பொழிவாற்றினார்.
நிகழ்ச்சிகளை நெறிப்படுத்திய நஹ்வீ எம்.எம்.முத்துவாப்பா நன்றி கூற, சிறிய குத்பா பள்ளியின் முஅத்தின் பிரபு முஹம்மத் தாஹாவின் துஆவுடன் விழா நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
இவ்விழாவையொட்டி, காயல்பட்டினம் நகரைச் சேர்ந்த ஏழைச் சிறுவர்கள் எழுவருக்கு இலவசமாக கத்னா செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விழா நிகழ்ச்சிகளில், நகரின் பல பகுதிகளைச் சேர்ந்தோர் கலந்துகொண்டனர். நிறைவில் அனைவருக்கும் தபர்ருக் எனும் நேர்ச்சை வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை, அர்ரஹீம் மீலாதுர்ரஸூல் குழுவினர் செய்திருந்தனர்.
அர்ரஹீம் மீலாதுர்ரஸூல் குழுவின் சார்பில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1436) நடத்தப்பட்ட இருபெரும் விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |