சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில், 65 பேர் பங்கேற்க, BBQ - சூட்டுக் கறியுடன் குடும்ப சங்கம நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, அம்மன்றத்தின் செயலாளர் கே.எம்.என்.மஹ்மூத் ரிஃபாய் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-
சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் கடந்த செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்ட படி, அதன் உறுப்பினர்களுக்கான – BBQவுடன் கூடிய குடும்ப சங்கம நிகழ்ச்சி, சிங்கப்பூர் Pasir Ris Parkஇல், 30.01.2016. சனிக்கிழமையன்று 17.00 மணி முதல் 22.00 மணி வரை நடைபெற்றது.
மன்றத்தின் சார்பில் BBQ - சூட்டுக் கறியுடன் ஏற்பாடு செய்யப்படும் முதலாவது குடும்ப சங்கம நிகழ்ச்சி இது என்பதால், மன்ற உறுப்பினர்கள், அவர்களது மனைவி - மக்கள் என மொத்தம் 65 பேர் வரை இதில் பங்கேற்று, தேங்காய்ச் சோறு, கருவாடு, பருப்பு, முட்டை உள்ளிட்ட பதார்த்தங்களுடன் கூடிய சுவையான உணவுடன், சுடப்பட்ட கோழி இறைச்சியை உண்டு மகிழ்ந்தனர். குழந்தைகளுக்கு இந்த ஏற்பாடு மிகுந்த மனமகிழ்ச்சியை அளித்ததால், கட்டுப்படுத்த இயலாத அளவுக்கு அவர்கள் துள்ளிக் குதித்து விளையாடி மகிழ்ந்தனர்.
நிறைவில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான பீ.எம்.முஹம்மத் ஸர்ஜூன், ஃபஸல் இஸ்மாஈல், பாக்கர் ஸாஹிப், வி.எஸ்.டீ.தாவூத், ஜவஹர் இஸ்மாஈல் ஆகியோருக்கு அனைவரும் நன்றி கூறினர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் முந்தைய குடும்ப சங்கம நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
சிங்கப்பூர் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |