கத்தர் காயல் நல மன்றம் சார்பில், 07.02.2016. ஞாயிற்றுக்கிழமையன்று - காயல்பட்டினம் ஜலாலியா நிகாஹ் மஜ்லிஸ் வளாகத்தில், மாடித்தோட்டம் பயிற்சி முகாம் நடத்தப்படவுள்ளது. இதுகுறித்து, முகாம் ஒருங்கிணைப்பாளர் கத்தர் முஹம்மத் முஹ்யித்தீன் வெளியிட்டுள்ள அறிக்கை:-
தமக்குத் தேவையான காய்கறி, கீரை, மலர், பழ வகைகளை - இரசாயண விஷம் கலப்பின்றி, தத்தம் வீடுகளின் மொட்டை மாடியிலேயே பாதுகாப்பான முறையில் பயிரிட்டுப் பயன்பெறவதற்காக கொள்வதற்காக, இறையருளால் எமது கத்தர் காயல் நல மன்றம் சார்பில், பின்வரும் விபரப்படி மாடித்தோட்டம் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.
மேற்கண்ட விபரப்படி, 20 ரூபாய் கட்டணம் செலுத்தி அனுமதிச் சீட்டைப் பெற்று, முகாமில் கலந்துகொள்ளலாம். பெறப்படும் நுழைவுக் கட்டணத்திற்குப் பகரமாக பாரம்பரிய நாட்டு விதைகள் முகாமில் வழங்கப்படவுள்ளது.
முழுக்க முழுக்க பணச் செலவின்றி செயல்படுத்தவே இம்முகாமில் பயிற்சியளிக்கப்படவுள்ளது. எனினும், விருப்பப்படுவோருக்கு - மாடித் தோட்டம் அமைக்கத் தேவையான பொருட்களும், மாடித்தோட்டம் உள்ளிட்ட பயனுள்ள தலைப்புகளிலான புத்தகங்களும் முகாமின்போது விற்பனைக்கு வைக்கப்படவுள்ளது.
முகாமில் பங்கேற்போருக்கு சிறுதானியம் - அவல் பழக்கூழ் ஆகியன சிற்றுண்டியாக வழங்கப்படவுள்ளன.
நமதூரில், பொதுமக்கள் நலன் கருதி முதன்முறையாக நடத்தப்படும் இம்முகாமில், தாங்களும் பங்கேற்பதுடன், தங்களுக்கு அறிமுகமான அனைவரையும் பங்கேற்கச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
முகாமில் மொத்தம் 500 பேருக்கு மட்டுமே இட வசதி செய்யப்பட்டுள்ளதால், முந்துவோருக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது. மகளிருக்கு தனி இடவசதியும் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
எஸ்.கே.ஸாலிஹ்
(பிரதிநிதி - கத்தர் காயல் நல மன்றம்)
கத்தர் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய (ஜனவரி 2016) செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |