காயல் ஆன் தி வெப் இணையதள சேவைகள் - 1998ம் ஆண்டு, டிசம்பர் 20 அன்று துவங்கின. இச்சேவைகள் துவங்கி - இரண்டு ஆண்டுகள்
கழித்து - டிசம்பர் 9, 2000 முதல் - தமிழில் செய்திகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.
கடந்த பதினைந்து ஆண்டுகளாக வெளியிடப்படும் செய்திகளை - செய்திகளை தேதி வாரியாக தேட என்ற சேவை
மூலம் காணலாம். இது தவிர, செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல், குறியீடு எண்கள் (ID #) வழி தேடல், காயல்பட்டணம்.காம் இணையதள
பக்கங்கள் தமிழ் வழி தேடல் - போன்ற வசதிகள் மூலமும், பழைய செய்திகளை காணலாம்.
மேலும் - இன்றைய தினத்தில், கடந்த ஆண்டுகளில் வெளியான செய்திகளை - வரலாற்றில் இன்று என்ற
பக்கத்தில் காணலாம். இந்த பக்கம், இது காலம் வரை - இந்த நாள், அந்த ஆண்டு என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.
பிப்ரவரி 6, 2008 அன்று காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் வெளியான செய்தி [செய்தி எண்: 1540]
புதன், பிப்ரவரி 6, 2008
கத்தரில் காயல் நலமன்றம் உதயம்!
செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
தோஹா - கத்தரில் வாழும் காயலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கத்தர் காயல் நலமன்றம் என்ற பெயரில் அமைப்பொன்றைத் துவக்கியுள்ளனர்.
கத்தரிலிருந்துகொண்டு, நகர்நலப் பணிகளைச் செய்திட வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்த இளைஞர்கள் சிலர் துவக்கமாக காயல்பட்டணம் ஃபஸ்லுல் கரீம் இல்லத்தில் இரண்டு முறை கூடி இதுகுறித்து விவாதித்துள்ளனர்.
அதன் விளைவாக கடந்த 07.12.2007 அன்று காயல் நண்பர்கள் இல்லத்தில் 19 காயலர்கள் ஒன்றுகூடி முறைப்படி அமைப்பைத் துவக்குவது பற்றி கருத்துப் பரிமாற்றம் செய்துகொண்டனர். இக்கருத்துப் பரிமாற்றத்தின் மூலம், தோஹா - கத்தரில் சுமார் 65 காயலர்கள் பணி செய்து வருவதாகக் கண்டறிந்து, அவர்களை ஒருங்கிணைக்கத் தீர்மானித்துள்ளனர்.
அத்துடன், அமைப்பின் உறுப்பினர் கட்டணம் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு ஆகியன பற்றியும் விவாதித்துள்ளனர். பின்னர், அடுத்த கூட்டத்தை 13.12.2007 அன்று வி.எம்.டி.அப்துல்லாஹ் இல்லத்தில் நடத்திட முடிவு செய்தனர்.
அந்த அடிப்படையில் கடந்த 13.12.2007 அன்று, வி.எம்.டி.அப்துல்லாஹ் இல்லத்தில், சுமார் பத்தாண்டுகளுக்கும் மேலாக தோஹா - கத்தரில் பணிபுரிந்துவரும் காயல்பட்டணம் தைக்கா தெருவைச் சார்ந்த இஸ்மாயில் தலைமையில் அமைப்பின் பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தினர்.
இக்கூட்டத்தில் ஹாஃபிழ் ஷாஹ் மீரான் கிராஅத் ஓதினார். கூட்டத்தின் தலைவர் தலைமையுரையில், அமைப்பு துவக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றி விளக்கினார். இந்த கூட்டத்தில் 31 காயலர்கள் கலந்துகொண்டனர்.
பெறப்படும் நன்கொடைகளை எந்தெந்தக் காரியங்களுக்குச் செலவழிப்பது என்பது பற்றி விவாதிக்கப்பட்டு, இறுதியில் கல்வி, மருத்துவம் மற்றும் அவசரத் தேவைகளுக்குப் பயன்படுத்தலாம் என முடிவு செய்யப்பட்டது.
இறுதியில் ஹாஃபிழ் நஸ்ருத்தீன் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-
(1) உறுப்பினர் குறைந்தபட்ச மாதச் சந்தா தொகையாக 10 கத்தர் ரியால் நிர்ணயிக்கப்படுகிறது. இயன்றவர்கள் 100 கத்தர் ரியால் வரை செலுத்தலாம்...
(2) 15 செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படவேண்டும். (அக்கூட்டத்திலேயே 11 உறுப்பினர்கள் தானாக முன்வந்து பதிவுசெய்துகொண்டனர்.)...
(3) கல்வி, மருத்துவம் மற்றும் அவசரத் தேவைகளுக்காக நிதி பயன்படுத்தப்பட வேண்டும்...
(4) ஒவ்வோர் ஆண்டும் 3 பொதுக்குழுக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்...
(5) ஒவ்வொரு மாதமும் முதல் வியாழனன்று நிர்வாகக் குழுக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்...
-இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கடந்த 18.01.2007 - ஹஜ் பெருநாளன்று கத்தரிலுள்ள வக்ரா கடற்கரையில் பெருநாள் ஒன்றுகூடல் நடத்தப்பட்டது. இக்கூடலில் 30 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
அதன்பின், கடந்த 03.01.2008 அன்று அமைப்பின் முதல் செயற்குழுக் கூட்டம் காயல் நண்பர்கள் இல்லத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கீழ்க்கண்டவாறு நிர்வாகிகள் தேர்வுசெய்யப்பட்டனர்:-
ஆலோசனைக் குழு:
(1) ஜனாப் இஸ்மாயீல்,
(2) ஜனாப் தம்பி,
(3) ஜனாப் கே.வி.ஏ.டி.ஹபீப்,
(4) ஜனாப் செய்யிது முஹம்மது ஸாஹிப் (மூஸா),
(5) ஜனாப் ரஃபீக் மற்றும்
(6) ஜனாப் சோனா முஹ்யித்தீன்.
தலைவர்:
ஜனாப் எஸ்.ஏ.எஸ்.ஃபாஸூல் கரீம்
துணைத்தலைவர்:
ஜனாப் பி.எம்.ஹூஸைன் நூருத்தீன்
செயலாளர்:
ஜனாப் எம்.என்.முஹம்மத் யூனுஸ்
இணைச் செயலாளர்கள்:
ஜனாப் கே.எம்.மீரான் மற்றும் ஜனாப் செய்யித் அஹ்மத்
பொருளாளர்:
ஜனாப் செய்யிது முஹ்யித்தீன்
இணைப் பொருளாளர்:
ஜனாப் வி.எம்.டி.அப்துல்லாஹ்
கல்வி உதவிக்குழு:
ஜனாப் வி.எம்.டி.அப்துல்லாஹ் மற்றும் ஜனாப் எம்.எஸ்.அப்துல் காதர்
மருத்துவ உதவிக்குழு:
ஜனாப் எம்.ஏ.சி.ஷாஹ் மீரான் மற்றும் நிளார்
இத்தகவலை அமைப்பின் துணைத்தலைவர் பி.எம்.ஹூஸைன் நூருத்தீன் தெரிவித்துள்ளார்.
|