DCW தொழிற்சாலையின் விரிவாக்க திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு - பிப்ரவரி 3 அன்று ஒத்திவைக்கப்பட்டது. பிப்ரவரி 16 க்கு முன்னர் தீர்ப்பு வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஜனவரி 28 அன்று காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் (KEPA) வழக்கறிஞர் டி.நாகசைலா வாதங்களை நிறைவு செய்தததை தொடர்ந்து, DCW தொழிற்சாலையின் சார்பாக பெங்களூரை சார்ந்த மூத்த வழக்கறிஞர் கே.ஜி.ராகவன் - தனது
வாதங்களை, ஜனவரி 29 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய இரு தேதிகளில் எடுத்து வைத்தார்.
இது குறித்து காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் (KEPA) செய்தி தொடர்பாளர் எஸ்.கே.சாலிஹ் வெளியிட்டுள்ள விபரங்கள்
வருமாறு:
DCW தொழிற்சாலையின் சார்பாக அதன் வழக்கறிஞர் கே.ஜி.ராகவன் எடுத்த வைத்த வாதங்களின் சாராம்சம் -
<><><> PVC, CPVC மற்றும் TCP திட்டங்கள், நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி திட்டங்களுக்கான விண்ணப்பத்தை DCW நிறுவனம் அக்டோபர் 2010 இல் புது டில்லியில் சமர்ப்பித்தது. இரு வேறு வகையான திட்டங்கள் என்பதால் வெவ்வேறு விண்ணப்பங்கள் சமர்ப்பித்து, வெவ்வேறு குழுக்கள்
பரிசீலனை செய்ய வேண்டும் என்ற விதிமுறை டிசம்பர் 2010இல் தான் அமலுக்கு வந்தது என்றும், இதனால் ஒரே விண்ணப்பம் சமர்ப்பித்தது சரி
என்று DCW நிறுவன வழக்கறிஞர் கூறினார்
<><><> மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை - டிசம்பர் 31, 2010 அன்று வெளியிட்ட அலுவலக குறிப்பின்படி, DCW நிறுவனத்திற்கு ஆவணம் தயாரித்த PURE ENVIRO நிறுவனம் - ஜூன் 30, 2011 வரை ஆவணங்கள் தயாரிக்கலாம் என்றும், PURE ENVIRO நிறுவனத்தின் விண்ணப்பம் பிப்ரவரி 2011இல்
நிராகரிக்கப்பட்டிருந்தாலும், டிசம்பர் 2010 இல் வெளியான அலுவலக குறிப்பு வழங்கிய அனுமதியின்படி - PURE ENVIRO நிறுவனம் EIA
ஆவணத்தை, DCW நிறுவனத்திற்கு தயாரித்தது சரியென்றும் DCW நிறுவன வழக்கறிஞர் கூறினார்.
<><><> PURE ENVIRO நிறுவனம் சார்பாக ஆவணம் தயாரிக்க பயன்படுதப்பட்டவர் ராம் சுப்பிரமணியம் என்றும், அந்நிறுவனத்தின் விண்ணப்பம் பிப்ரவரி 2011இல் சம்பந்தப்பட்ட துறைக்கு நிராகரிக்கப்பட்டிருந்தாலும், மே 2011இல் - ராம் சுப்பிரமணியம் அந்த துறைக்கு புதிதாக விண்ணப்பம்
செய்ததாகவும், அந்த விண்ணப்பத்தை நிலுவையில் வைத்து 2014இல் NABET அனுமதி வழங்கியது என்றும், எனவே - ஆவணம்
தயாரிக்கப்படும்போது தகுதி சான்றிதழ் இல்லையென்றாலும், அந்த ஆவணத்தை தயாரித்தவருக்கு, சில மாதங்கள் கழித்து தகுதி சான்றிதழ்
வழங்கப்பட்டது என்றும், எனவே - அந்த நிறுவனம் தயாரித்த ஆவணத்தை (EIA) நிராகரிக்க முடியாது என்றும் DCW நிறுவன வழக்கறிஞர் கூறினார்.
<><><> இதே பதில் - சோழமண்டலம் நிறுவனம் மூலம் தயார் செய்யப்பட்ட ஆவணத்திற்கு பொருந்தும் என்றும், அந்த நிறுவனம் கூடுதல் தகவல்
தயாரிக்கப்பட்ட போது (ஜூன் - செப்டம்பர் 2012), அந்த துறைக்கான் தகுதி சான்றிதழ் இல்லையென்றாலும், அந்த விண்ணப்பத்தை
வி.எஸ்.பாஸ்கர் என்பவர் தயாரித்தார் என்றும், அவரின் விண்ணப்பம் நிலுவையில் இருந்து ஜூலை 2013இல் அவருக்கு தகுதி சான்றிதழ்
வழங்கப்பட்டது என்றும் DCW நிறுவன வழக்கறிஞர் கூறினார்.
<><><> PURE ENVIRO மற்றும் DCW ஆகிய நிறுவனங்களுக்கு இடையே உள்ள நெருக்கத்தை அடிப்படையாக கொண்டு, PURE ENVIRO நிறுவனம் தயாரித்த ஆவணத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குரியதாக்க கூடாது என்றும், அந்த ஆவணம் - தொழில் தர்மம் பேணி தயாரிக்கப்பட்டது என்றும் DCW நிறுவன வழக்கறிஞர் கூறினார்.
<><><> தாமிரபரணி ஆற்றில் இருந்து 5 கிலோமீட்டர் தூரத்திற்குள் விரிவாக்க திட்டங்களுக்கு விதிவிலக்கு உள்ளது என்றும், புதிய தொழிற்சாலைகள் தான் துவங்க கூடாது என்றும், 5.2 கிலோமீட்டர் என்ற தூரத்தை திருச்செந்தூர் தாசில்தார் உறுதி செய்து சான்றிதழ் வழங்கியப்பின் அதற்கு மேல் கேள்வி எழவில்லை என்றும் DCW நிறுவன வழக்கறிஞர் கூறினார்.
<><><> தாமிரபரணி ஆற்றில் இருந்து தூரம் சம்பந்தமான் வரைப்படங்களில் செயற்கைக்கோள் படங்களை கணக்கில் எடுக்கக்கூடாது என்றும், அவை - ஆற்றின் ஓட்டத்தை குறிப்பிட்ட தினத்தில் காண்பிக்கும் என்றும், நிரந்தரமான ஓட்டப்பாதையை அவை பிரதிபலிக்காது என்றும் DCW நிறுவன
வழக்கறிஞர் கூறினார்.
<><><> அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை கூடம் மூலம் தான் பரிசோதனை செய்ய வேண்டும் என்று இல்லை என்றும், PURE ENVIRO நிறுவனம் தனது சொந்த பரிசோதனை கூடத்தில் பரிசோதனைகளை மேற்கொண்டது என்றும் DCW நிறுவன வழக்கறிஞர் கூறினார்.
<><><> மெர்குரி மாசு சம்பந்தமாக KEPA அமைப்பு தாக்கல் செய்த ஆவணங்கள் 2000ம் ஆண்டிற்கு முன்னர் உள்ளவை என்றும், 2002இல் DCW நிறுவனம் பிரபல வல்லுனர்கள் மூலம் பரிசோதனை செய்தது என்றும், அவர்கள் - பாதரசத்தால் எந்த மாசுவும் இல்லை என கூறியிருப்பதாகவும் DCW நிறுவன வழக்கறிஞர் கூறினார். மேலும் DCW நிறுவனம் 2007 முதல் மெர்குரி பயனபடுத்துவது இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
<><><> DCW நிறுவனத்திடம் 2400 ஏக்கர் நிலம் இருப்பதாகவும், இதில் 1800 ஏக்கர் நிலத்தில் உப்பளங்கள் உள்ளதாகவும், 400 ஏக்கர் நிலங்கள் -
குடித்தனங்கள், அலுவலகங்கள் போன்ற தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றும், 200 ஏக்கர் நிலத்தில் தொழிற்சாலைகள்
உள்ள்தகாவும், அதில் 13 சர்வே எண்கள் உள்ளடிக்கிய 10 ஏக்கர் நிலத்தில் தான் விரிவாக்கப் பணிகள் நடைபெறவுள்ளன என்றும்
அது குறித்தே முடிவெடுக்க வேண்டும் என்றும், அதற்கு சம்பந்தமில்லாத எந்த பிரச்சனைகளையும் ஆய்வு செய்ய வேண்டியது இல்லை என்றும் DCW
நிறுவன வழக்கறிஞர் கூறினார்.
<><><> வேதியல் சம்பந்தப்பட்ட எந்த நிறுவனமும் 100 சதவீதம் மாசு ஏற்படுத்தாமல் செயல்பட் முடியாது என்றும், DCW நிறுவனம் சுற்றுச்சூழலை பாதுகாக்க - தானே முன் வந்து, பல முயற்சிகளை செய்துள்ளதாகவும் DCW நிறுவன வழக்கறிஞர் கூறினார்.
<><><> தான் விண்ணப்பத்திருந்த 4 திட்டங்களில் (PVC,CPVC,TCP,மின் உற்பத்தி) இரு திட்டங்களை (TCP, மின் உற்பத்தி) தற்போது மேற்கொள்ளவில்லை என தீர்ப்பாயத்தில் உறுதி அளிப்பதாகவும் கூறினார். இந்த முடிவு, சுற்றுச்சூழல் ஒப்புதலில் ஏற்படுத்தக்கூடிய சட்ட விளைவுகளை அறிந்துள்ளீர்களா என நீதிபதி வினவ, அந்த இரு திட்டங்களையும் கை விடவில்லையென்றும், காலம் தாழ்த்தி நிறைவேற்றுவோம் என்றும் DCW நிறுவன வழக்கறிஞர் கூறினார்.
<><><> வழக்கில் தெரிவித்துள்ளது போல், திட்டத்திற்கு பயன்படுத்தப்பட உள்ள இடங்கள், CRZ - 1 இடம் இல்லை என்றும், CRZ - 3 இடம் என்றும், CRZ - 1 இடமாக் மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றும், அதற்கான தனது ஆட்சேபனையை DCW நிறுவனம் தெரிவித்துள்ளது என்றும், CRZ - 3 பகுதிக்கு வெளியே தான், கட்டுமானங்கள் நடக்கும் என்றும், அது குறித்த அண்ணா பல்கலைக்கழக ஆவணத்தை DCW நிறுவன வழக்கறிஞர் வழங்கினார்.
<><><> கொட்டமடைக்காடு என்ற காப்பு காடு குறித்த தகவல் இல்லை என்று மாவட்ட வனத்துறையே தெரிவித்துள்ளது என்றும், இது குறித்து KEPA அமைப்பு சமர்ப்பித்துள்ள வரைப்படம் 1958ம் ஆண்டைய வரைப்படம் என்றும், தற்போது காடு எனப்படும் இடத்தில் சிறு சிறு மரங்களே உள்ளது என்றும் புகைப்படங்களை DCW நிறுவன வழக்கறிஞர் சமர்ப்பித்தார்.
<><><> CANCER FACT FINDING COMMITTEE (CFFC) குறித்து கேள்வி எழுப்பிய அவர், இந்த வழக்கு பொது நல நோக்கில் தாக்கல் செய்யப்படவில்லை
என்றும், ஹாங்காங்கில் இருந்து வெளிநாட்டு கை இயக்குவதாகவும் DCW நிறுவன வழக்கறிஞர் குற்றம்சாட்டினார்.
<><><> புற்று நோய் குறித்த புகார்கள் மிகைப்படுத்தப்படுகின்றன என்றும், காயல்பட்டினம் நகராட்சி ஆவணப்படி 2012இல் 17 நபர்களே புற்று நோயினால்
மரணமடைந்துள்ளனர் என்றும், இது போன்ற புகார் காயல்பட்டினத்தில் இருந்து மட்டும் தான் வருகிறது என்றும் DCW நிறுவன வழக்கறிஞர் கூறினார்.
<><><> EIA ஆவணத்தில் உள்ள குறைப்பாடுகள் பெரியவை அல்ல என்றும், மத்திய அமைச்சகத்தின் குழு கேட்டுக்கொண்ட அனைத்து தகவல்களும் அந்த ஆவணத்தில் உள்ளன என்றும் DCW நிறுவன வழக்கறிஞர் கூறினார்.
<><><> VCM லாரி மூலமான விபத்துகள் மிகவும் அரிது என்றும், அது குறித்த பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் DCW நிறுவன வழக்கறிஞர் கூறினார்.
<><><> இது சுற்றுச்சூழலை கணக்கில் கொண்டு வளர்ச்சிக்காக (SUSTAINABLE DEVELOPMENT) மேற்கொள்ளப்படும் திட்டம் என்றும், எனவே - ஆவணம் தயாரித்தவர்கள், தயாரித்த தேதியில் தகுதியுடன் இல்லை (LITERAL COMPLIANCE) என்ற காரணத்திற்காக அனுமதியை ரத்து செய்யக்கூடாது என்றும், அவர்கள் கால போக்கில் தகுதி பெற்றார்கள் (SUBSTANTIVE COMPLAINCE) என்றும் DCW நிறுவன வழக்கறிஞர் கூறினார்.
[Administrator: கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 10:15 / 12.2.2016] |