DCW தொழிற்சாலையின் விரிவாக்க திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு - பிப்ரவரி 3 அன்று ஒத்திவைக்கப்பட்டது. பிப்ரவரி 16 க்கு முன்னர் தீர்ப்பு வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கில் ஜனவரி 28 அன்று
காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் (KEPA) வழக்கறிஞர் டி.நாகசைலா மேற்கொண்ட வாதங்கள் விபரங்களை அமைப்பின் செய்தி
தொடர்பாளர் எஸ்.கே.சாலிஹ் வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது:
காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் (KEPA) வழக்கறிஞர் டி.நாகசைலா - ஜனவரி 28 அன்று தீர்ப்பாயத்தில் எடுத்த வைத்த வாதங்கள்
வருமாறு -
<><><> ஒரு திட்டத்தை அனுமதிக்கவா, அனுமதிக்க வேண்டாமா என மத்திய அரசின் குழு (Expert Appraisal Committee) முடிவு செய்ய ENVIRONMENTAL IMPACT ASSESSMENT (EIA)
அறிக்கை முக்கிய பங்கு வகிக்கிறது. PURE ENVIRO நிறுவனம் தயாரித்த இந்த அறிக்கையில் பல தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளதகாவும், பல
தகவல்கள் தவறாக வழங்கப்பட்டுள்ளதாகவும் KEPA வழக்கறிஞர் உதாரணங்களுடன் விளக்கினார்.
<><><> தாமிரபரணி ஆறு - திட்ட இடத்தில் இருந்து 5.2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது; ஆனால் - அந்த அறிக்கையில்
உள்ள வரைப்படங்களே, 4 கிலோ மீட்டர் தூரத்தில் தான் உள்ளது என தெரிவிப்பதை - வண்ணப்படங்களுடன் KEPA வழக்கறிஞர் விளக்கினார்.
<><><> தமிழக அரசின் 1989 மற்றும் 1998 ஆண்டுகளின் அரசாணைப்படி (GOs) - தாமிரபரணி உட்பட தமிழகத்தின் முக்கிய ஆறுகளின்
எல்லைகளில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்திற்குள் - அதிக மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை நிறுவ கூடாது. இந்த விதிமுறையில் இருந்து
தப்பவே, DCW தொழிற்சாலை, தூரத்தை அதிகமாக (5.2 கிலோமீட்டர்) காண்பிப்பதாக வழக்கறிஞர் தெரிவித்தார். 4 கிலோமீட்டர் தூரத்தில் தான்
உள்ளது என சமூக ஆர்வலர் ஜோயல் வழங்கிய சமீபத்திய தொழில்நுட்ப அடிப்படையிலான ஆதாரங்களை - ஒப்புதல் கொடுப்பதற்கு முன்னர், அரசு
பரிசீலக்கவில்லை என KEPA வழக்கறிஞர் விளக்கினார்.
<><><> PURE ENVIRO நிறுவனம் - EIA ஆவணத்தை அக்டோபர் 2010 முதல் டிசம்பர் 2011 வரை தயாரித்ததாகவும், எந்த ஆய்வுக்கூடம் மூலம்
பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன என்ற தகவல் அறிக்கையில் இல்லை என்றும், இதற்கான சுற்றுச்சூழல் பரிசோதனைகளை (BASELINE
ENVIRONMENTAL DATA) மே - ஜூலை 2011 கால கட்டத்தில் மேற்கொண்டது என தெரிவிப்பது நம்ப தகுந்தது அல்ல என்றும், இந்த அறிக்கையை
தயாரிக்க உதவிய நிபுணர்கள், இந்த நிறுவனத்தில் ஜூன் 2011 இல் தான் இணைந்துள்ளனர் என்பதற்கான ஆதாரங்களை KEPA வழக்கறிஞர்
வழங்கினார்.
<><><> EIA அறிக்கை என்பது சுயேட்சையான ஒரு அமைப்பு தயாரிக்க வேண்டும் என்றும், DCW நிறுவனத்திற்கும், PURE ENVIRO நிறுவனத்திற்கும்
நீண்ட கால தொடர்பு உள்ளது என்றும், PURE ENVIRO நிறுவனத்தினர் DCW நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவதாகவும் வழக்கறிஞர்
ஆதாரத்துடன் தெரிவித்தார்.
<><><> மேலும் - DCW நிறுவனத்தின் கழிவு சுத்தீகரிப்பு பணிகளுக்கான ஒப்பந்தம் PURE ENVIRO நிறுவனத்துடன் உள்ளதாகவும், அப்படியிருக்க -
PURE ENVIRO நிறுவனம், DCW நிறுவனத்திற்கு தயாரித்த EIA அறிக்கையில், எவ்வாறு சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது என்ற உண்மை இருக்கும்
என்றும் வழக்கறிஞர் வினவினார்.
<><><> PURE ENVIRO நிறுவனத்திற்கு இந்த துறையில் அறிக்கை தயாரிக்க அனுமதி பிப்ரவரி 2011இல் நிராகரிக்கப்பட்ட பிறகு, மே 2011இல் இந்த
அறிக்கையை தயாரிக்க முனைந்திருக்க கூடாது என்றும் வழக்கறிஞர் கூறினார்.
<><><> PURE ENVIRO நிறுவனம் தயாரித்த EIA அறிக்கையை ஆய்வு செய்த மத்திய அரசின் ஓர் அங்கமான NATIONAL ACCREDITATION BOARD OF
EDUCATION AND TRAINING (NABET), அந்த அறிக்கையின் நம்பக தன்மையை கேள்விக்கு உட்படுத்தி உள்ளதையும், அந்த அறிக்கையை தயாரிக்க
அந்த நிறுவனத்திற்கு தகுதி இல்லாத நிலையில், PURE ENVIRO அந்த அறிக்கையை தயாரித்திருக்கவே கூடாது என கண்டனத்தை பதிவு
செய்திருப்பதையும் KEPA வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.
<><><> PURE ENVIRO தயாரித்த அறிக்கையின் அடிப்படையிலேயே மக்கள் கருத்து கேட்கும் கூட்டம் (PUBLIC HEARING), நவம்பர் 2011இல் நடந்தது
என்றும் - போலியான ஆவணங்கள் அடிப்படையில் நடந்த மக்கள் கருத்து கேட்கும் கூட்டம், சட்டத்திற்கு முன் மக்கள் கருத்து கேட்கும் கூட்டமே
அல்ல என்றும் வழக்கறிஞர் வாதாடினார்.
<><><> மக்கள் கருத்து கேட்கும் கூட்டத்திற்கு பிறகு, மே 2012 இல் அந்த அறிக்கை (EIA) - மத்திய அரசு குழுவிடம் சென்றப்போது - கூடுதல்
தகவல் கோரப்பட்டது. கேட்கப்பட்டது வெறும் கூடுதல் தகவல் அல்ல என்றும், ஜூலை 2011இல், மத்திய அரசு குழு இணைக்க கூறி, DCW / PURE
ENVIRO நிறுவனங்கள் இணைக்காமல் விட்ட தகவல்களே (ADDITIONAL TERMS OF REFERENCES) அவை என்றும், இந்த உண்மை
மறைக்கப்பட்டுள்ளது என்றும் KEPA வழக்கறிஞர் தெரிவித்தார்.
<><><> கூடுதல் தகவல் தயாரிக்க - DCW நிறுவனம், சோழமண்டலம் என்ற நிறுவனத்தை பயன்படுத்தியதாகவும், அந்த நிறுவனமும் - அந்த
காலகட்டத்தில், அந்த துறை சம்பந்தப்பட்ட அறிக்கை தயாரிக்க தகுதி இழந்திருந்தது என்றும், ஜூலை 2013 இல் தான் அந்த தகுதியை மீண்டும்
பெற்றது என்றும், அதற்கு முன்னரே கூடுதல் தகவல் தயாரிக்கப்பட்டு விட்டதாகவும் ஆதாரங்களுடன் வழக்கறிஞர் விளக்கினார்.
<><><> NATIONAL ACCREDITATION BOARD OF EDUCATION AND TRAINING (NABET) அமைப்பு - PURE ENVIRO நிறுவனம் போல, சோழமண்டலம்
நிறுவனத்திற்கும் அந்த அறிக்கையை தயாரிக்க தகுதி இல்லை என்றும், அவ்வாறு தயாரித்ததற்கு சோழமண்டலம் நிறுவனத்திற்கும்
கண்டனத்தை பதிவு செய்திருப்பதையும் KEPA வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.
<><><> DCW நிறுவனத்தின் எல்லையை தொட்டு கொட்டமடை காப்பு காடு உள்ளது என்றும், இந்த தகவல் EIA அறிக்கையில் மறைக்கப்பட்டுள்ளது
என்றும் வழக்கறிஞர் தெரிவித்தார். இதற்கு ஆதரவாக காயல்பட்டினம் வட பாக கிராம படத்தையும், 1958 ம் ஆண்டு - DCW நிறுவனத்திற்கு,
மதராஸ் அரசு 1400 ஏக்கர் நிலம் வழங்கிய பத்திரத்தில் - இந்நிறுவனத்தின் எல்லைகளாக காப்பு காடு உள்ளது என்ற ஆவணத்தையும் KEPA
வழக்கறிஞர் வழங்கினார்.
<><><> தனது விரிவாக்கத் திட்டத்திற்கு DCW நிறுவனம் பயன்படுத்தப்பட உள்ள நிலங்கள், CRZ எல்லைக்குள் வருவது மறைக்கப்பட்டுள்ளது என்ற
விபரத்தையும் வழக்கறிஞர் எடுத்துரைத்தார்.
<><><> DCW நிறுவனம் - பணியாளர்கள் உட்பட சுற்றுப்புற பகுதியில் உள்ள காயல்பட்டினம் உட்பட 8 கிராமங்களில் மேற்கொண்டதாக - உடல் நல
அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்திருந்தது. அந்த அறிக்கையை KEPA அமைப்பு தீர்ப்பாயத்தில் சமர்ப்பித்திருந்தது. 2008, 2009 மற்றும்
2010 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த ஆவணம் முற்றிலும் போலியான
ஆவணம் என்றும், ஒரே நபர்களின் பெயர் மாற்றி, மாற்றி இடம்பெற்றுள்ளதாகவும், கணினியில் CUT & PASTE முறை பின்பற்றப்பட்டு அந்த
ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், விரிவாக வழக்கறிஞர் விளக்கினார்.
<><><> DCW நிறுவனம் - பல ஆண்டுகளாக சுற்றுச்சூழலை மாசு படுத்தி வரும் காரணத்திற்காகவும், அந்நிறுவனம் சமர்ப்பித்த தகுதியற்ற ஆவணம்
அடிப்படையில் சுற்றுச்சூழல் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்ற காரணத்திற்காகவும், தமிழக அரசின் அரசாணைகள்படி தாமிரபரணி ஆற்றுக்கு அருகே
இது போன்ற தொழிற்சாலைகள் புதிதாக நிறுவ அனுமதி வழங்க கூடாது என்ற காரணத்திற்காகவும், இது வரை ஏற்பட்டுள்ள மாசுவினால்
ஆயிரங்கணக்கான மக்கள் பாதிப்படைந்துள்ளனர் என்பதனாலும் - விரிவாக்க திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும்
என்று கூறி, தனது ஆரம்ப வாதங்களை KEPA வழக்கறிஞர் டி.நாகசைலா - ஜனவரி 28 அன்று நிறைவு செய்தார்.
KEPA வழக்கறிஞர் டி.நாகசைலா அக்டோபர் 5 அன்று எடுத்து வைத்த வாதங்கள் காண இங்கு சொடுக்கவும்>>
KEPA வழக்கறிஞர் டி.நாகசைலா அக்டோபர் 10 அன்று எடுத்து வைத்த வாதங்கள் காண இங்கு சொடுக்கவும்>>
KEPA வழக்கறிஞர் டி.நாகசைலா நவம்பர் 2 அன்று எடுத்து வைத்த வாதங்கள் காண இங்கு சொடுக்கவும்>>
|