காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW தொழிற்சாலை சார்பில், காயல்பட்டினத்தில் இளைஞர் - மகளிர் மன்றங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஆலையின் மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.சித்திரைவேல் அனுப்பியுள்ள செய்தியறிக்கை:-
இந்திய அரசு நேரு யுவகேந்திரா, டிசிடபிள்யு நிறுவனம், மதர் சமூக சேவை நிறுவனம் மற்றும் கெல்வின் சோசியல் சர்வீஸ் சொசைட்டி ஆகியவை இனைந்து காயல்பட்டினம் விசாலாட்சியம்மன் கோவில் தெருவில் உள்ள பஜனை மண்டபத்தில் வைத்து தலைமைத்துவ மற்றும் சமுதாய வளர்ச்சிக்கான இளையோருக்கான கருத்தரங்கு 3 நாட்கள் நடைபெற்றது.
இதில் சமூதாய வளர்ச்சியில் இளைஞர் மன்றங்கள் மற்றும் மகளிர் மன்றங்களின் பங்கு, மகளிர் மேம்பாடு, வாக்காளர் விழிப்புணர்வு, கல்வியின் அவசியம், வருமானம் ஈட்டக்கூடிய வழிகள், பெண்ணுரிமை, வாழ்க்கைக்கல்வி, உணவு பழக்கவழக்கம், உடல் நலம், தலைமைத்துவம், தூய்மை, அரசு நலத்திட்டங்கள், வங்கியின் செயல்பாடுகள், தேசம் எதிர்பார்க்கும் நல்ல இளைஞன், சமூக நல்லிணக்கம் ஆகிய தலைப்புகளில் அரசு அதிகாரிகள், வங்கி மேலாளர்கள், கல்லூரி போராசிரியர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலா;கள் மற்றும் பல துறை வல்லுநர்கள் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார்கள்.
கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா மற்றும் இளைஞர் மன்றங்கள், மகளிர் மன்றங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
வருகை தந்தவர்களை மதர் சமூக சேவை நிறுவன இயக்குநர் எஸ்.ஜே.கென்னடி வரவேற்றார். தூத்துக்குடி மாவட்ட நேரு யுவ கேந்திரா அதிகாரி ராஜகோபால் தலைமை தாங்கினார். மதர் சமூக சேவை நிறுவன சட்ட ஆலோசகர் வழங்கறிஞர் அ.சதீஷ் பாலன், டிசிடபிள்யு நிறுவன மக்கள் தொடர்புத்துறை துணை மேலாளர் சு.சித்திரைவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினாhக டிசிடபிள்யு நிறுவன செயல் உதவி தலைவர் (நிர்வாகம்) டாக்டர் எம்.சி.மேகநாதன் சான்றிதழ்களையும், விளையாட்டு உபகரணங்களையும் வழங்கினார்.
இதில் திருச்செந்தூர், உடன்குடி, ஆழ்வார்திருநகரி ஒன்றியங்களுக்குட்பட்ட இளைஞர் மன்றங்கள் மற்றும் மகளிர் மன்றங்களைச் சார்ந்த 20 மன்றங்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு மன்றத்திற்கும் கேரம்போர்டு, வாலிபால், வாலிபால் நெட் ஆகியவை வழங்கப்பட்டது.
20 மன்றங்களில் இருந்து 200 பேர் கலந்துகொண்டனர். முடிவில் மதர் சமூக சேவை நிறுவன ஒருங்கிணைப்பாளர் எஸ்.பானுமதி நன்றி கூறினார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
DCW ஆலையின் நலத்திட்ட உதவிகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|