மேக்ஸ் ஜோன்ஸ் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, காயல்பட்டினம் பரிமார் நல மன்றம் சார்பில், அலியார் தெரு (கே.டீ.எம். தெரு) ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 31.01.2016. ஞாயிற்றுக்கிழமையன்று 09.00 மணி முதல் 14.30 மணி வரை, மருத்துவ பரிசோதனை & விழிப்புணர்வு இலவச முகாம் நடைபெற்றது. பரிமார் தெருவைச் சேர்ந்த பீர் முஹம்மத் முகாமைத் துவக்கி வைத்தார்.
இம்முகாமில், திருநெல்வேலி அருணா கார்டியாக் கேர் நிறுவனத்தினர் இருதய நோய் பரிசோதனையையும், திருநெல்வேலி - மேலப்பாளையம் செல்வன் மருத்துவமனையினர் நீரழிவு நோய் பரிசோதனையையும், நாகர்கோவில் - தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் மற்றும் பெஜான்சிங் கண் மருத்துவமனையினர் கண் பரிசோதனையையும், திருநெல்வேலி திரவியம் எலும்பு முறிவு மருத்துவமனையினர் எலும்பு மூட்டு நோய்கள் பரிசோதனையையும், திருநெல்வேலி புற்றுநோய் தடுப்பு மையம் மற்றும் உதவும் உள்ளங்கள் அறக்கட்டளை சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் பரிசோதனையையும் மேற்கொண்டனர்.
காயல்பட்டினத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் இம்முகாமில் திரளாகப் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, பரிமார் வெல்ஃபர் அசோஸியேஷன் அமைப்பினர் செய்திருந்தனர்.
தகவல்:
சுல்தான்
பரிமார் நல மன்றம் தொடர்பான முந்தைய (ஜனவரி 2016) செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|