DCW தொழிற்சாலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் வாதங்கள், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பிப்ரவரி 3 அன்று நிறைவுற்றது. இதுகுறித்து, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் (KEPA) செய்தி
தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
DCW தொழிற்சாலையின் விரிவாக்கத் திட்டத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை எதிர்த்து, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு – KEPA
சார்பில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மே 26, 2014 அன்று தீர்ப்பாயத்தால் அனுமதிக்கப்பட்ட இந்த வழக்கில், அனைத்து தரப்பின்
எழுத்துப்பூர்வமான வாதங்கள் (PLEADINGS) சமர்ப்பிப்பு - செப்டம்பர் 3, 2015 அன்று நிறைவுற்றது.
இதனை தொடர்ந்து - இவ்வழக்கில் வாதங்கள் (SUBMISSIONS) - அக்டோபர் 5 அன்று துவங்கின.
அக்டோபர் 5, அக்டோபர் 10, நவம்பர் 2 மற்றும் ஜனவரி 28 ஆகிய
தேதிகளில் , காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) சார்பாக வழக்கறிஞர் டி.நாகசைலா - தனது வாதங்களை
எடுத்து வைத்தார்.
இடைப்பட்ட காலத்தில் - காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) சார்பாக, வழக்கு தொடர்பான் புதிய ஆவணங்களும் - தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் (KEPA) துவக்க வாதங்கள் நிறைவுற்ற பின்னர், DCW தொழிற்சாலை சார்பாக, பெங்களூரை சார்ந்த மூத்த வழக்கறிஞர் கே.ஜி.ராகவன் தனது வாதங்களை - ஜனவரி 29 மற்றும் பிப்ரவரி 1 அன்றும் எடுத்து வைத்தார்.
DCW தொழிற்சாலையின் வழக்கறிஞர் தனது வாதங்களை நிறைவு செய்தப்பின், காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) வழக்கறிஞர் டி.நாகசைலா தனது இறுதி வாதங்களை பிப்ரவரி 3 அன்று எடுத்து வைத்தார்.
அனைத்து தரப்பையும் - மறு தினம் (பிப்ரவரி 4), தங்களின் எழுத்துப்பூர்வ வாதங்களை (WRITTEN SUBMISSIONS) சமர்ப்பிக்க நீதிபதி ம.சொக்கலிங்கம் உத்தரவிட்டதை தொடர்ந்து, இவ்வழக்கின் வாதங்கள் நிறைவுற்றது.
இவ்வழக்கை கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாரித்து வந்த நீதிபதி ம.சொக்கலிங்கம் ஓய்வு பெற உள்ள காரணத்தால், இவ்வழக்கின் தீர்ப்பு பிப்ரவரி 16க்கு முன்னர் வெளியாகும் என தெரிகிறது.
ஜனவரி 28, ஜனவரி 29, பிப்ரவரி 1, பிப்ரவரி 3 ஆகிய தேதிகளில் இரு தரப்பு வழக்கறிஞர்களும் எடுத்து வைத்த வாதங்கள் விபரங்களை காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) தனி அறிக்கையாக வெளியிடும்.
இவ்வழக்கில் காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) சார்பாக வழக்கறிஞர்கள் டி.நாகசைலா, டாக்டர் வி.சுரேஷ் மற்றும் பிரீஸ்ட்லி
மோசஸ் ஆகியோர் ஆஜராகின்றனர்.
மத்திய அரசு சார்பாக வழக்கறிஞர் ஜி.எம். செய்யது நூருல்லாஹ் ஷரீப், DCW நிறுவனம் சார்பாக வழக்கறிஞர்கள் ஆர்.வெங்கட்டவதன் மற்றும் நிவேதிதா, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக வழக்கறிஞர் திருமதி ரீதா சந்திரசேகர், தமிழக அரசு சார்பாக வழக்கறிஞர்கள் எம்.கே. சுப்ரமணியம் மற்றும் எம்.ஆர்.கோகுல் கிருஷ்ணன், PURE ENVIRO ENGINEERING PRIVATE LIMITED நிறுவன்ம் சார்பாக வழக்கறிஞர் வி.ஸ்ரீனிவாச பாபு, CHOLAMANDALAM MS RISK SERVICES LIMITED சார்பாக வழக்கறிஞர் பி.பிரேம்குமார் ஆகியோர் இவ்வழக்கில் ஆஜராகின்றனர். |