தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பில், திருச்சியில் 31.01.2016. அன்று நடத்தப்பட்ட ஷிர்க் ஒழிப்பு மாநாட்டில் பெருந்திரளானோர் பங்கேற்றுள்ளனர். இதுகுறித்த செய்தியறிக்கை:-
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஜனவரி 31 அன்று, திருச்சி அருகே உள்ள பிராட்டியூரில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. அன்று காலையில் துவங்கி, இரவு வரை தொடர்ந்து நடைபெற்ற இம்மாநாட்டில் தமிழகம் முழுவதிலிருந்தும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
ஷிர்க்கின் வகைகளை விளக்கும் கண்காட்சி, நாடகம் உள்ளிட்டவை நடைபெற்றன.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிறுவனர் மவ்லவீ பீ.ஜைனுல் ஆப்தீன் உலவீ, மாநில தலைவர் மவ்லவீ பக்கீர் முஹம்மத் அல்தாஃபீ, மாநில நிர்வாகி மவ்லவீ ஷம்சுல் லுஹா ரஹ்மானீ உள்ளிட்டோர் உரையாற்றினர்.
மக்கள் திரளைக் கருத்திற்கொண்டு, மருத்துவ முதலுதவிக்காக, TNTJ ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இம்மாநாட்டை முன்னிட்டு, காயல்பட்டினம் நகர கிளை சார்பில் நகரின் பல்வேறு தெருக்களில் தெருமுனைப் பரப்புரை செய்யப்பட்டிருந்தது. மாநாட்டில் பங்கேற்பதற்காக. இரண்டு பேருந்துகள், 11 வேன்கள் உள்ளிட்ட வாகனங்களில், அலியார் தெருவிலுள்ள அமைப்பின் அலுவலகத்தின் முன்பிலிருந்து புறப்பட்டுச் சென்று திரும்பினர்.
தகவல் & படங்கள்:
M.M.முஜாஹித் அலீ
கூடுதல் படங்கள்:
Y.M.முஹம்மத் தம்பி (AKM ஜுவல்லர்ஸ்)
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொடர்பான முந்தைய (ஜனவரி 2016) செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|