காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டம் - கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியில் முஹ்யித்தீன் ஆண்டகை கந்தூரி விழா நிகழ்ச்சிகள் 05.02.2016 துவங்கி, 07.02.2016 வரை நடைபெற்றன. அந்நாட்களில் அதிகாலையில் கத்முல் குர்ஆன் ஓதி ஈஸால் தவாப் செய்யப்பட்டது.
அன்றாடம் 20.30 மணிக்கு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 06.02.2016 சனிக்கிழமையன்று, காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஏ.கே.முஹம்மத் அஸ்ஃபர் அஷ்ரஃபீ சிறப்புரையாற்றினார்.
07.02.2016 ஞாயிற்றுக்கிழமையன்று 10.00 மணியளவில், பள்ளி மக்தப் மாணவ-மாணவியருக்கான - பேச்சு, சூரா மனனம், வினா-விடை ஆகிய சன்மார்க்கப் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியை, பள்ளியின் நிர்வாகக் குழு உறுப்பினர் ஹாஃபிழ் என்.டீ.ஸதக்கத்துல்லாஹ் ஜுமானீ நெறிப்படுத்தினார்.
அன்று 16.30 மணிக்கு மஹான் முஹ்யித்தீன் ஆண்டகை அவர்களின் புகழ்பாடும் மவ்லித் மஜ்லிஸ், கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியின் பிலால் எஸ்.எம். தலைமையிலும், மஃரிபுக்குப் பின், ராத்திபத்துல் காதிரிய்யா திக்ர் மஜ்லிஸ் - ஹாஃபிழ் எஸ்.எல்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா தலைமையிலும் நடைபெற்றது.
20.30 மணிக்கு, காயல்பட்டினம் பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும் – முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரிகளின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ கந்தூரி நாள் சிறப்பு சொற்பொழிவாற்றினார்.
மறுநாள் 08.02.2016 அன்று (இன்று) அதிகாலையில், கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி இமாம் மவ்லவீ ஹாஃபிழ் முஹம்மத் ஷாஹ் மஹ்ழரீ துஆ இறைஞ்ச, அதனைத் தொடர்ந்து நேர்ச்சை வினியோகம் நடைபெற்றது.
அனைத்து நிகழ்ச்சிகளிலும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, பள்ளி தலைவர் ‘ஜுவெல் ஜங்ஷன்’ கே.அப்துல் ரஹ்மான், செயலாளர் ‘டேக் அன் வாக்’ என்.டீ.இஸ்ஹாக் லெப்பை ஜுமானீ உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.
கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியில் ஹிஜ்ரீ 1434இல் நடைபெற்ற கந்தூரி விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி தொடர்பான முந்தைய (ஜனவரி 2016) செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|