காயல்பட்டினம் சென்னை வழிகாட்டு மையம் (KCGC) சார்பில், சென்னையில் நடத்தப்பட்ட பல்துறை மருத்துவ இலவச முகாமில் 208 பேர் பங்கேற்றுப் பயனடைந்துள்ளனர். இதுகுறித்து, அவ்வமைப்பின் செயலாளர் எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்தஹூ.
KCGC மற்றும் சென்னை கிரவுன் அரிமா சங்கம், சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் சென்னை மண்ணடியில் மியாசி மேல்நிலை பள்ளியில் ஜனவரி 24 ஞாயிறு அன்று நடந்து முடிந்தது அல்ஹம்துலில்லாஹ்.
இந்த முகாமில் பொது மருத்துவத்திற்காக 208 நபர்கள் வந்து பயன்பெற்றார்கள், கண் புரை அறுவை சிகிச்சைக்காக 18 நபர்களும் பயன்பெற்றார்கள், இரத்த தானம் முகாமில் 22 நபர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தார்கள். கண் புரை அறுவை சிகிச்சைக்காக 2 நபர்கள் உடனடியாக சங்கர நேத்ராலயா கண் மருத்துவ மனைக்கு அழைத்து செல்லப்பட்டு அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த மருத்துவ முகாமில் காயல்பட்டினத்தைச் சார்ந்த மருத்துவர்களான டாக்டர் இத்ரீஸ், டாக்டர் நெய்னா, டாக்டர். கிஷார், டாக்டர் இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு சிறந்த முறையில் மருத்துவ ஆலோசனைகள் வழங்கினார்கள்.
இந்த நிகழ்விற்காக சகோ.சொளுக்கு முஹம்மது நூஹ், சகோ.நெட்காம் புகாஹி, சகோ.லயன்.M.M.அஹமது, சகோ.சமீமுல் இஸ்லாம், சகோ.பல்லாக் சுலைமான், சகோ.இப்னு சவுது, சகோ.குளம் முஹம்மது தம்பி, சகோ.அட்வகேட் ஹஸன் பைசல், சகோ.ஆடிட்டர் ரிபாய் அஹமது, சகோ.குளம் சித்திக், சகோ.குளம் இப்றாகிம் ஆகியோர்கள் இந்த நிகழ்விற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இருந்தனர்.
இனிவரும் காலங்களில் 3 மாதத்திற்கு ஒரு முறை இதுபோல மருத்துவ முகாம் நடத்தலாம் என இந்த மருத்துவ முகாம் முடிவில் முடிவு இன்ஷா அல்லாஹ்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
சென்னையிலிருந்து KCGC சார்பாக...
சொளுக்கு M.A.C.முஹம்மது நூஹ்
KCGC சார்பில் இதற்கு முன் நடத்தப்பட்ட மருத்துவ இலவச முகாம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
KCGC தொடர்பான முந்தைய (ஜனவரி 2016) செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|