காயல் ஆன் தி வெப் இணையதள சேவைகள் - 1998ம் ஆண்டு, டிசம்பர் 20 அன்று துவங்கின. இச்சேவைகள் துவங்கி - இரண்டு ஆண்டுகள்
கழித்து - டிசம்பர் 9, 2000 முதல் - தமிழில் செய்திகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.
கடந்த பதினைந்து ஆண்டுகளாக வெளியிடப்படும் செய்திகளை - செய்திகளை தேதி வாரியாக தேட என்ற சேவை
மூலம் காணலாம். இது தவிர, செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல், குறியீடு எண்கள் (ID #) வழி தேடல், காயல்பட்டணம்.காம் இணையதள
பக்கங்கள் தமிழ் வழி தேடல் - போன்ற வசதிகள் மூலமும், பழைய செய்திகளை காணலாம்.
மேலும் - இன்றைய தினத்தில், கடந்த ஆண்டுகளில் வெளியான செய்திகளை - வரலாற்றில் இன்று என்ற
பக்கத்தில் காணலாம். இந்த பக்கம், இது காலம் வரை - இந்த நாள், அந்த ஆண்டு என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.
பிப்ரவரி 9, 2013 அன்று காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் வெளியான செய்தி [செய்தி எண்: 10159]
சனி, பிப்ரவரி 9, 2013
டி.சி.டபிள்யு. தொழிற்சாலைக்கு நோட்டீஸ் அனுப்ப மாவட்ட ஆட்சியர் உத்தரவு: தினகரன் செய்தி!
செய்தி: காயல்பட்டணம்.காம்
காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் 07.02.2013
வியாழக்கிழமையன்று ஆய்வு நடத்தினார். இது குறித்து தினகரன் நாளிதழ் இன்று (பிப்ரவரி 9) வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:
கழிவுநீர் கடலில் கலப்பு விவகாரம்: தனியார் ஆலைக்கு நோட்டீஸ்!
ஆறுமுகநேரியில் தனியார் ஆலையிலிருந்து வெளியேறும் கழிவுநீர் கடலில் கலப்பது குறித்து விளக்கமளிக்க ஆலைக்கு நோட்டீஸ் அனுப்ப ஆர்டிஓக்கு
கலெக்டர் உத்தரவிட்டார்.
ஆறுமுகநேரியில் உள்ள தனியார் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவுநீரால் புற்றுநோய் ஏற்பட்டு பாதிக்கப்படுவதாக காயல்பட்டினத்தில் உள்ள
பொதுநல அமைப்புகள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக சென்னையில் உள்ள சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஆறுமுகநேரி தனியார் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் பகுதிகளையும் கடலில் கலக்கும் இடத்தை பார்வையிட
கலெக்டர் ஆசிஷ்குமார் வந்தார். அப்போது அவரிடம் ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவர் கல்யாணசுந்தரம் தலைமையில் உப்பு உற்பத்தியாளர்கள்,
தனியார் தொழிற்சாலையால் உப்பளங்கள் பாதிக்கப்படுவதாக புகார் தெரிவித்தனர்.
இதனையடுத்து தனியார் தொழிற்சாலையை சுற்றியுள்ள உப்பளங்கள் மற்றும் ஆலையிலிருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் ஓடை மற்றும் கடலில்
கலக்கும் பகுதிகளை கலெக்டர் ஆசிஷ்குமார் ஆய்வு செய்தார்.
அவருடன் திருச்செந்தூர் ஆர்டிஓ கொங்கன், தாசில்தார் நல்லசிவம், காயல்பட்டினம் நகராட்சி தலைவர் ஆபிதாஷேக், கவுன்சிலர்கள் சம்சுதீன்,
பத்ரூல்ஹக், ஹைரிய்யா, அஜ்வாது, சாமி, நகராட்சி ஆணையர் அசோக்குமார் ஆகியோர் இருந்தனர்.
கழிவுநீர் கடலில் கலப்பது தொடர்பாக தனியார் ஆலையிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப ஆர்டிஓக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
இவ்வாறு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
|