சஊதி அரபிய்யா - ரியாத் காயல் நல மன்றத்தின் 51ஆவது பொதுக்குழுக் கூட்டம், பல்சுவைப் போட்டிகளுடன் நடைபெற்று முடிந்துள்ளது. இதுகுறித்து, அவ்வமைப்பின் செயலாளர் ஒய்.ஏ.எஸ்.ஹபீப் முஹம்மத் முஹ்ஸின் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நற்கிருபையினால் கடந்த 5-ம் தேதி எம் ரியாத் காயல் நல மன்றத்தின் 51-வது/ இந்த ஆண்டின் முதல் பொதுக்குழு கூட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.
ஆரம்பமாக இறைமறை ஓதி ஹாபிழ் S.A.C. அஹ்மது சாலிஹ் அவர்கள் துவக்கினார், நிகழ்ச்சியை ஹாபிழ் P.S.J. ஜெய்னுல் ஆப்தீன் நெறிபடுத்தினார். அதனைத்தொடர்ந்து ஹாபிழ் செய்ஹு தாவூத் இத்ரீஸ் அவர்கள் வந்தோரை வரவேற்றார். நிகழ்ச்சியில் 2016-17 - ற்காண தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகக்குழு உறுப்பினர்களை மன்ற ஆலோசனைக்குழு உறுப்பினர் நயீமுல்லாஹ் அவர்கள் அரங்கத்தில் அனைவருக்கும் அறிமுகப்படுத்தினார்.
முன்னிலை:
கூட்டத்திற்கு எம்மன்ற புதிய தலைவர் A.H. முஹம்மது நூஹு , காயல் பதியிலிருந்து வருகை தந்துள்ள டூட்டி ஷாகுல் ஹமீது, எம்மன்ற உறுப்பினர் ரியாதுக்கு அருகாமையில் உள்ள (சாக்ரா) என்ற ஊரில் பணிபுரியும் குழந்தை நல மருத்துவர் டாக்டர் இப்ராஹிம் மற்றும் தம்மாம் காயல் நற்பணி மன்ற மூத்த உறுப்பினர் M.M செய்து முஹம்மது புஹாரி ஆகியோர்கள் முன்னிலை வகித்தார்கள்.
தலைவர் உரை:
மன்ற தலைவர் முஹம்மது நூஹு அவர்கள் இக்கூட்டத்தில் அனைவரையும் ஒன்றுகூடி பார்ப்பதற்கு மிகவும் சந்தோசமாக இருப்பதாகவும், தொடர்ந்து இம்மன்றம் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்திருப்பதை தான் 2000-ம் ஆண்டில் மன்றத்தில் உறுப்பினராக்கி கொண்டதிலிருந்து இன்றுவரை அதை பார்ப்பதில் உலக காயல் நல மன்ற வரிசையில் ஒரு மாபெரும் வளர்ச்சியை அடைந்துள்ளதை நினைவு கூர்ந்தார்.
அதற்கு மன்ற உறுப்பினர்களின் அளப்பெரிய நன்கொடைகள் மிகவும் உறுதுணையாக இருப்பதையும் குறிப்பாக மருத்துவ உதவியில் நம்மன்றம் அனைத்துலக காயல் நல மன்றங்களுக்கு ஒரு முன்மாதிரியாக திகழ்வதாக தெரிவித்தார்.
மன்ற நலத்திட்டங்கள்:
எமது மன்றத்தின் செயல் திட்டங்களை விரிவாக மன்ற செயலாளர் முஹ்சின் எடுத்துரைத்தார்.
இதுவரை கடந்த ஆண்டில் நாம் செய்திருக்கின்ற உதவிகளின் தொகையை பட்டியலிட்டு மேலும் ரமலான் காலங்களில் வழங்கும் உணவுப்பொருள் திட்டம் எவ்வாறு செயல் வடிவம் கொடுக்கப்படுகிறது, மன்ற உறுப்பினர்கள் அதற்குண்டான தொகையை செலுத்தி அவர்களுக்கு பரிட்சயமான ஏழை குடும்பத்திற்கு உணவுப்பொருள் கிடைத்திட வழி வகை செய்யலாம் என்பதை கூறி, ஆனால் மாதந்திர உணவு திட்டத்தில் (நமதூர் பூர்வீகம்/கணவனை இழந்தோர்கள்/குழந்தைகள் இல்லாதோர்) கண்டெடுத்து கூடுதலாக எமது காயல் பிரதிநிதியின் பரிந்துரையின் பேரில் மட்டுமே வழங்கி வருகிறோம் என்பதை விவரித்தார்.
புறநகர் பள்ளிகளின் உதவி திட்டங்களின் ஆய்வு:
ரியாத் காயல் நல மன்றத்தினரால் ஆரம்பிக்கப்பட்டு IQRA ஒருங்கிணைப்பில் மிக நேர்த்தியாக செயல்படுத்தி வருகிற புறநகர் பள்ளிகளின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதின் வரிசையில் UK மற்றும் கத்தார் காயல் நல மன்றமும் கை கோர்த்திருக்கின்றன என்பதை மன்ற துணைத்தலைவர் PMS முஹம்மது லெப்பை மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
கடந்த மாதம் தாயகம் சென்றபோது அருணாசலபுரம் பள்ளியின் தேவையை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கெடுத்ததில் பள்ளி நிர்வாகிகள் மிகுந்த ஆச்சிரியத்துடன் இவ்வளவு தரமான பொருட்களை விண்ணப்பித்த ஓரிரு மாதத்திலேய அதை நிறைவேற்றி எங்களை சற்று திகைக்க வைத்து விட்டீர்களே என்று கூறியதுடன், MKT மற்றும் LK அப்பா காலத்தில்தான் இதே மாதிரி சில உதவிகளை பெற்றோம் அதை மீண்டும் உயிர் பெறச்செய்திருக்கிறீர்கள் என்று பெருமிதத்துடன் கூறி சமயம் தாண்டி இப்பேருதவிகளை செய்ததற்கு எங்கள் நிர்வாகம் என்றுமே நன்றியுடன் இருப்போம் என்று உணர்ச்சியுடன் கூறியதை எடுத்து கூறினார்.
புதிய உறுப்பினர்கள் அறிமுகம்:
ரியாத் மாநகருக்கு புதிதாக வந்துள்ள மற்றும் ஏனைய நாடுகளில் இருந்து பணியிடம் மாறி வந்துள்ள அன்பர்கள் தங்களை RKWA உறுப்பினர்களாக தங்களது மாத சந்தா கணக்குகளையும் மன்றப்பொருளாளர்களிடம் செலுத்தி தங்களை இணைத்துக்கொண்டார்கள் மேலும் அவர்களின் இந்த ஆர்வம் இன்ஷா அல்லாஹ் மன்றத்தின் வளர்ச்சியை இன்னும் அதிகரிக்கும் எனபதில் சந்தேகமில்லை. புதிய உறுப்பினர்களின் விபரம் கீழே...
1. S. செய்து நியாஸ்
2. A.H. சதக்கத்துல்லாஹ்
3. K.S.H. உமர் அப்துல் காதர்
4. V.M.T. அப்துல்லாஹ்
5. M.M.S. சேகு அப்துல் காதர் ஸூபி
6. R. முஹம்மது அப்துல் காதர்
7. A.L. முஹம்மது சதக்கத்துல்லாஹ்
8. K.M. மாஹின் அபூபக்கர் சித்தீக்
9. M.B. முஹம்மது அஜாருதீன்
10. K.D.N. முஹம்மது லெப்பை
11. S.S. ஜகரிய்யா
12. N.M. நூஹு தம்பி
13. முஹம்மது இர்ஷாத்
14. சித்தீக்
15. H.M. ஜகரிய்யா மௌலானா
16. O.A.K. செய்து அஹ்மது
கருத்துரைகள்:
மன்ற ஆலோசகர் MEL நுஸ்கி அவர்கள் சதகாவின் வலிமை பற்றி குரான் மற்றும் ஹதீஸை மேற்கோள் காட்டி விளக்கமளித்தார். தொடர்ந்து மன்ற பாடகர் சேகு அப்துல் காதர் அவர்கள் ஒரு அழகான பாடலை படித்து, பின்னர் ஹோமியோபதி மருத்துவத்தின் சிறப்பை எடுத்து கூறி அதை நமது KMT மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யுமாறு கேட்டு கொண்டார்.
அடுத்து முன்னிலை வகித்த தம்மாம் மன்ற மூத்த உறுப்பினர் M.M செய்து முஹம்மது புஹாரி அவர்கள் காப்பீட்டு திட்டம் குறித்த விழிப்புணர்வை மேலும் ஷிபா என்ற உலக கூட்டமைப்பு மூலம் நமதூர் மக்களை சென்றடைய வழி செய்யுமாறு கேட்டு கொண்டார். தொடராக குழந்தை நல மருத்துவர் டாக்டர் இப்ராஹிம் அவர்கள் வருமுன் காப்போம் என்ற நோக்கில் நோய் வருவதற்கு முன்னரே அதை எதிர் நோக்கக்கூடிய சவால்களை சமாளிப்பதில் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற உதவுவதில் நாம் பங்கெடுக்க வேண்டுமென்பதை உணர்த்தினார்கள்.
தம்மாமில் இருந்து வந்த மற்றுமொரு உறுப்பினர் மொஹுதும் நைனா அவர்கள் காயல் பிறை கொடியான் மர்ஹூம் SMB மஹ்மூது ஹுசைன் அவர்களின் ஒரு அழகான பாடலை பாடி நம் காயலர்களை ஒன்று கூடி பார்பதற்கு மிக்க சந்தோசமளிப்பதாகவும் தெரிவித்தார்.
காயல் புழக்கச்சொல் விளையாட்டு:
மன்ற செயற்குழு உறுப்பினர்கள் ஆதம் அபுல்ஹசன் மற்றும் இப்ராகிம் பைசல் அவர்கள் வழி நடத்த இப்போட்டி (நமதூரின் புழக்கத்தின் வார்த்தைகளை) கணினி மூலம் காட்டக்கூடிய இரு படங்களை ஒன்றினைத்து சரியாக சொல்ல வேண்டும். இப்போட்டியில் அதற்கேற்றாற்போல் 5 அணிகளாக (தம்மடை / சோத்து வாடா / சிட்டிகறி / வட்டலாப்பம் / கறிகஞ்சி ) பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டது. மிக அருமையாக நகைச்சுவையுடன் கூடிய இப்போட்டி வந்தோரை வெகுவாக கவர்ந்தது. இறுதியில் வெற்றி பெற்ற கறிகஞ்சி அணியினருக்கும் மற்றும் வெற்றிக்கு முயன்ற சோத்து வாடா அணியினருக்கும் முன்னிலை வகித்த பெருமக்கள் மற்றும் மன்ற மூத்த உறுப்பினர்கள் பரிசுகளை வழங்கினார்கள்.
விருந்துபசாரம்:
சுவையான காயல் அஹனி பிரியாணி வந்த அனைவருக்கும் பேக் (பார்சல்) செய்து பரிமாறப்பட்டது, இப்பணியை சிரமத்துடன் சிறப்பாக செயல் படுத்திய மன்ற துணை பொருளாளர் வெள்ளி சித்தீக் மற்றும் MEL நுஸ்கி அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்து கொள்ளப்பட்டது.
நன்றியுரை:
ஆரம்பத்திலிருந்து அவதானித்து கொண்டிருந்த அனைத்து உறுப்பினர்களுக்கும், இக்கூட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முஹ்சின், வெள்ளி சித்தீக் மற்றும் ஹசன் அவர்களுக்கும், நிகழ்வுகளை நெறிபடுத்தி இறுதியாக துஆ ஓதிய ஹாபிழ் P.S.J. ஜெய்னுல் ஆப்தீன் அவர்களுக்கும் மற்ற ஏனையவர்களுக்கும் மன்ற செயற்குழு உறுப்பினர் SB முஹம்மது முஹியத்தீன் அவர்கள் நன்றியை தெரிவித்து கொண்டார். மேலும் இப்பொதுக்குழு கூட்ட அழைப்பை அனைத்து மன்ற உறுப்பினர்களுக்கும் குறுஞ்செய்தி (SMS) மூலம் அனுப்பிய நம் மன்ற உறுப்பினர் அபூபக்கர் சித்தீக் அவர்களுக்கும் இத்தருனத்தில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
இறுதியாக துஆ ஓதி, குழுப்படம் எடுத்த பின்னர் கூட்டம் நிறைவு பெற்றது, இக்கூட்டத்தை சிறப்பாக நடைபெற உதவி செய்த வல்ல நாயனுக்கே எல்லாப்புகழும், அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ஊடகக்குழு - ரியாத் காயல் நல மன்றம்
படங்கள் உதவி:
ஹாஃபிழ் S.A.C.அஹ்மத் ஸாலிஹ்
ரியாத் காயல் நல மன்றத்தின் முந்தைய (50ஆவது) பொதுக்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ரியாத் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |